You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
The modern world, which is deluded into believing that wealth is nothing more than a collection of numbers and heaps of metal, unknowingly robs humans of their true peace and their sincere, untainted relationships.
But this was not the philosophy understood by the ancient Tamils. Knowledge, firmness of character, truthfulness, virtuous companionship, freedom from illness, and the other blessings that together form the sixteen forms of prosperity were seen as an inseparable moral framework. The ancient Tamil tradition teaches that if one earns wealth by selling honesty or gathers money by wearing down the body, the very foundation of life will crumble.
The burden of debt carried for the sake of false prestige, the masks worn to gain the approval of others, and the shortcut successes pursued by straying from righteousness—this book calls us to break free from such illusions. It seeks to reclaim, from the roots of Sangam Tamil wisdom, the art of living with inner strength and uncompromising self-reliance.
(வெறும் எண்களின் தொகுப்பையும், உலோகக் குவியல்களையும் மட்டுமே
செல்வம் என மயங்கும் இக்கால உலகியல், மனிதனின் உண்மையான
நிம்மதியையும், கள்ளமற்ற சுற்றத்தையும் அவனறியாமலேயே காவு
வாங்குகிறது.
ஆனால், பழந்தமிழர் கண்ட மெய்யியல் இதுவன்று. அறிவு, திண்மை,
வாய்மை, நற்சுற்றம், பிணியின்மை என விரிவடையும் பதினாறு
பேறுகளும் ஒன்றோடொன்று பிரிக்கவியலாத ஓர் அறக் கட்டமைப்பு.
இதில் நேர்மையை விற்றுப் பொருளை ஈட்டினாலோ, உடலை உருக்கி
நாணயத்தைச் சேர்த்தாலோ ஒட்டுமொத்த வாழ்வின் ஆணிவேரும்
அற்றுப்போகும் என்பதைத் தமிழரின் ஆதி மரபு உணர்த்துகிறது.
போலி மானத்திற்காகச் சுமக்கும் கடன் சுமை, பிறர் மெச்சுவதற்காக
அணியும் முகமூடி, அறம் பிறழ்ந்து தேடும் குறுக்குவழி வெற்றி, இதுபோன்ற
மாயையிலிருந்து விடுபட்டு, மீண்டும் அகத்திண்மையோடும், எதற்கும்
வளைந்து கொடுக்காத தற்சார்போடும் வாழும் கலையைச் சங்கத் தமிழின்
வேர்களிலிருந்து மீட்டெடுக்கிறது இந்நூல்.
இது உங்களை வேறு ஒருவராக மாற்றுவதற்கான உரைநடை அன்று,
உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் அந்தத் தொன்ம ஆளுமையை
விழிப்படையச் செய்யும் ஓர் அறைகூவல்.)
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Pathinaru Perugal - தமிழர் மரபின் பதினாறு பேறுகள்.