You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) ‘தமிழ் நாடகத் தந்தை’ என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.
1891இல் சென்னையில் ‘சுகுணவிலாச சபா’ என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர்.
நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சம்பந்தம் அவர்களின் தன் வரலாறு இந்த நூல்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book என் சுயசரிதை.