You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு, காஞ்சி மாநகர் என்று தொடங்கி அன்றைய களரிக்களத்தையும், மருத்துவமனைகளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, தான் எழுதிய சுவடியொன்றை உறவினர்களிடம் அளித்துவிட்டு தன் குரு மாதாவின் கட்டளைக்கு அடிபணிந்து சீன தேசம் சென்று, அங்கு ஒரு கிராமத்தை அம்மை போன்ற கொடிய நோயிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் காப்பாற்றி, அவர்களுக்கு களரியையும் மருத்துவத்தையும் கற்பித்து, அவர்கள் திருப்திக்காக, அவர்கள் கொடுத்த விஷக்களியை உண்டு அந்த இடத்திலேயே உயிர் துறந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதையை போதிதர்மரின் கதையாக தாங்கள் கற்பனை செய்திருந்தால், தயவுகூர்ந்து அந்த எண்ணங்களை தங்கள் மனத்திரையில் இருந்து அகற்றிவிடுங்கள். அது போதிதர்மரின் உண்மைப் பிம்பமல்ல.
புத்த மதத்திற்காக தன் அரச பதவியைத் துறந்து, முற்றிலும் புதியதொரு நாட்டிற்குச் சென்று மதத் தொண்டாற்றி, பல இன்னல்களைச் சந்தித்து, தான் கண்ட ஜென் புத்த மதத்தை நிறுவி அதற்கு அவசியம் எனக் கருதி தான் கற்ற தற்காப்புக் கலையை அவர்களுக்கும் பயிற்றுவித்து தாய்லாந்து, மலேயா, கம்போடியா, சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மஹாயான புத்தத்தை தழைக்கச் செய்த ஒரு தமிழன் என கருதப்படும் போதிதர்மனின் உண்மையான முகத்தை இந்நூலில் நாம் தரிசிக்க உள்ளோம்.
ஜீம் பூம் பா என்று சொன்னவுடன் தானாய் நம் கைக்கு வரும் செய்தியல்ல போதி தர்மரின் வரலாறு. நவீன உபகரணங்கள் இன்றி மக்கள் வாழ்ந்த காலத்தைச் சார்ந்த போதிதர்மரை இன்ன இடத்தில், இன்னார் மகனாக, இன்ன குலத்தில், இன்ன தேதியில் பிறந்தார் என்றோ சீனாவிற்க்கு இன்ன வழியிலேயே சென்றார் என்றோ அங்கு இன்ன முறையிலேயே வாழ்ந்தார், மடிந்தார் என்று வரையறுத்துக் கூறுவதென்பது இயலாத காரியம். பல இன்னல்களை கடந்தால் மட்டுமே மேற்கணட ‘இன்ன’ பிறவற்றிற்க்கு விடை தேட இயலும்.
என்னையா அப்படிப்பட்ட இன்னல்கள் என்று கேட்கிறீர்களா? இதோ போதிதர்மரைப் பற்றிய சில கருத்துக்கள்.
போதிதர்மர் பல்லவ நாட்டு இளவரசராக வளர்ந்தார் என்று நாம் நம்பிகொண்டிருக்கும் வேளையில் சிலர் இவரை களபிற இளவரசர் என்று சொல்லி அதற்க்கான யூகங்களையும் சான்றுகளையும் அள்ளி வீசுகின்றனர். இதற்கும் ஒரு படி மேலே ஏறி போதிதர்மர் பாரசீக நாட்டைச் சார்ந்தவர் என்று அறிவிப்பவர்களும் உண்டு. குடியுரிமையிலேயே இவ்வளவு சிக்கல்.
அவர் வாழ்ந்தகாலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று பலரும் ஒப்புக்கொள்ளும் சமயத்தில் சிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் வேறு சிலர் ஏழாம் நூற்றாண்டு என்றும் கருத்து வேறுபட்டிருப்பதையும் உங்கள் முன் சமர்ப்பிப்பது அவசியமாகிறது.
இவை அனைத்தையும் விழுங்கும் விதமாக, போதிதர்மர் என்னும் நபரே ‘கற்பனையின் திருவுருவம்; போய் வேற வேளையிருந்தா பாருங்க தம்பி” என்று ‘சிம்பிளாக’ சொல்லிவிட்டுப் அதற்க்கும் ‘காம்ப்ளக்ஸ்’ ஆக சான்று தரும் அறிவு ஜீவிகளின் கருத்திற்கும் நாம் காது கொடுத்தாக வேண்டியுள்ளது. ஏனென்றால் நமக்கு பிடித்த்தை எடுத்து, பிடிக்காததை விடுத்துச் செல்ல இது ஒருதலைப் பட்ச நூல் அல்ல.
நம்மால் இயன்ற அளவு நடுவுநிலைமையைப் பேணுவோம். நம் நாடு எடுத்து வைத்திருக்கும் பெயரைக் காக்கும் பொருட்டு.
வைரமுத்து பாணியில் சொன்னால் ‘முரண்பாட்டு மூட்டையாக’ உள்ளது போதிதர்மரின் வரலாறு. இந்த நிலையில் இப்படித்தான் அவர் வாழ்ந்தார் என்று எந்த ஆராய்சியும் இன்றி கூறுவது அறிவுடைமையாகாது. எதற்காக இதையெல்லாம் உங்களுக்கு சொல்கின்றேன் என்று குழம்பவேண்டாம்.
இந்த நூல் போதிதர்மரின் வரலாற்றை கதை போலன்றி எளிய ஆராய்ச்சி வடிவில் தெரிவிக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆராய்ச்சிக்கு தாங்கள் தயாரென்றால் அழைத்துச் செல்ல நானும் தயார். இப்பயணத்திற்க்கு ஆயத்தமானவர்களுக்கு மட்டுமே இந்நூலின் மற்ற பக்கங்கள். என்ன? போகலாமா?
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book போதிதர்மர் (Premium Edition).