You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
இந்த நாவலான தலைமுறைகள், 19 ஆம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரையிலான தேயிலை எஸ்டேட் தொழிலாளி ஒருவனின் ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியது. கதையின் பிரதான கதாநாயகன் வேலுசாமி 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். வேலுசாமி பெரிய மகன் வீரசாமி தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடற்கரையோர மணல்பாடு கிராமத்தில் பிறந்தார். வீரசாமியின் முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர் என அழைக்கப் பட்னர் . பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பாஞ்சாலம்குறிச்சியைச் சேர்ந்த குறு நிலா மன்னர் கட்டப்போம்மனுடன் சேர்ந்து அவர்கள் போராடினர்.
ஒருகாலத்தில் , யாழ்ப்பாணத்தில் பல வீடுகளில் சிங்கள சமூகம் மற்றும் தோட்டத் தொழிலாள தமிழர்களிடமிருந்து சேவையாற்ற சிறுவர்களை நியமித்தனர் . வேலுசாமியி பாட்டன் கண்ணுசாமி வேலை தேடி படகு மூலம் இலங்கைக்கு வந்தார். செட்டியாரை உதவியுடன் ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த பிறகு, கண்ணுசாமி யின் பேரன் வேலுசாமி, அவனுடைய கடின உழைப்பு, உறுதிப்பாடு, திறமை மற்றும் தன்னம்பிக்கை மூலம் வாழ்க்கையில் உயர் பதவி வகித்து தன் சமூகத்துக்கு பெரும் உதவிகள் செய்தான் என்பதை கதை சொல்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது கங்காணி அமைப்பின் கீழ் இலங்கைக்கு வந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த வாழ்க்கை நிலை மற்றும் கஷ்டங்களை இந்த நாவல் விளக்குகிறது.
. வேலுசாமியின் திறமை அவரன் அரச சேவையில் நிர்வாக அதிகாரியாக ஆவதற்கு எவ்வாறு உதவியது என்றும் கதை கூறுகிறது. அவன் தன் சமுதாயத்தில் வைத்த அன்பு அந்த சமூகத்தின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு அவரனக்கு உத்வேகம் அளித்தது. சிறுவர் உழைப்பு, இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், தமிழ் மற்றும் சிங்காள தமிழ் சமூகம் ஆகியவற்றிற்கு இடையில் திருமணம், தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான சுதந்திர போராட்டம், மன்னார் வளை குடாவில் முத்து குளிப்பு, வா ஊ சிதுறைமுகம், உப்புத்தளத்தில் வேலை போன்ற பல்வேறு தோழில்களில் ஏற்றப்பட்ட அனுபவங்களை இந்த நாவல் உள்ளடக்கியுள்ளது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தலைமுறைகள்.