You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review
Type: Print Book
Genre: Literature & Fiction, Sports & Adventure
Language: Tamil
Price: ₹350 + shipping

Also Available As

Also Available As
Price: ₹350 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

பல கோடி ஆண்டுகளுக்கு முன், அகோரா மற்றும் பூலோகா என்ற இரு வகையான வேற்று கிரக உயிரினங்கள் தங்களது கிரகத்தில் இருந்து பூமியை வந்தடைந்தன. அவைகள் ஒன்றாக இணைந்து பூமியைப் பண்படுத்தி, தங்களது இனங்களைப் பெருக்கி ஓர் ராஜ்ஜியத்தை நிறுவினர்.
புது புது உயிரினங்களை உருவாக்கி, அவற்றினை பூமியில் உலவ விடுவது அவைகளின் முக்கிய பொழுதுப் போக்காக இருந்தது. அப்படி அவற்றின் ஒன்றாக இணைத்து, புதிதாக ஓர் உயிரினத்தைப் படைத்தனர்.
அவர்கள்தான் மனிதர்கள் .
அகோராக்கள் மனிதர்களை தங்களது உணவுக்காகவும் ,அடிமை வேலை செய்யவும் பயன்படுத்தினர் . ஆனால். பூலோகாக்கள், மனிதர்களை தங்களது நண்பர்களாகவும், தான் உருவாக்கிய குழந்தைகளாகவும் எண்ணியது. இதனால் இரு இனத்திற்கும் இடையே ஓர் பிரிவினை வந்தது
அதன் விளைவாக, அகோராக்களைப் பகைத்துக் கொண்டு, பூலோகா இனம் மொத்தமும் , அனைத்து மனிதர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, பூமியின் மற்றோர் எல்லைக்கு சென்றனர் . அங்கு, பூலோகாக்கள் மனிதர்களுக்கு கட்டடவியல் , வானவியல் , கணிதவியல் என அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்து மனிதர்களுக்கு அறிவூட்டினர். ,மனிதர்களும் அவர்களைத் தங்களது கடவுளாக வழிபட்டனர்.
இனிதான் பிரச்சனை ஆரம்பமானது.
அது, சில நாட்களில் பூமிக்கு ஓர் பேரழிவு வரப்போவதை பூலோகாக்கள் உணர்ந்தனர். அவ்வழிவினை தடுக்கவும், தங்களது கடவுள் ஆராதேவியின் கோபத்தை சாந்தப் படுத்தவும் ஓர் கோவிலை எழுப்ப முடிவெடுத்தனர். அதனால் பூலோகாக்கள் மனிதர்களோடு ஒன்றிணைந்து ஓர் மாமலை உயரத்தில், முழுதும் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஓர் முக்கோண கோவிலை, ரகசிய இடத்தில் உருவாக்கினர்.
அக்கோவிலில், ஓர் குறிப்பிட்ட நாளில் பூஜை வழிபாடுகள் மேற்கொண்டு, நரபலி கொடுப்பின் பிரபஞ்சக் கடவுள் ஆராதேவியின் சீற்றம் குறைந்து , மொத்த உலகையும் ஆளும் மகா சக்தியை கடவுள் கொடுப்பார் என பூலோகாக்கள் நம்பினர்.
எனவே, பூலோகக்களின் அரசன், கோவிலின் ரகசியம் கருதி அது எங்குள்ளது என்பதை அறிய இரண்டு புத்தகங்களையும், அவற்றிற்கான இரு சாவிகளையும் ,உருவாக்கினான். புத்தகமும், சாவியும் இணைந்தால் மட்டுமே கோவிலுக்கான இருப்பிடம் தெரியும்.
அனைவரும் கடவுளின் நாளுக்காக காத்திருந்தனர்.
இதனை அறிந்த எதிரி இனமான அகோராக்கள் மொத்த உலகையும் ஆளும் சக்தியை கொடுக்கும், பூலோகாக்களின் கோவிலை அடைய நினைத்தன. அவர்கள் எதிர்பாரா சமயம் அவர்கள் மேல் போர் தொடுத்தன. அச்சரித்திர போரில் பூலோகாக்கள் தோற்றன. மனிதர்கள் அழிக்கப்பட்டனர்.
ஆனால், எவ்வளவோ முயன்றும் பூலோகா கோவிலை அகோராக்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பூமிக்கு நேரப்போகும் பெரும் அழிவைக் கருதி, அவைகள் மீண்டும் தங்களது கிரகத்திற்கே திரும்பின.
இரண்டு புத்தகங்களும் , சாவிகளும் எங்கு போனது என இன்று வரைத் தெரியவில்லை. உலகின் பெரும் அரசர்களும், ஜாம்பவான்களும் அதனைத் தேடி தோற்றுப் போயினர்.. இந்நொடி வரைக்கூட, அகோராக்களும் மனிதன் வசம் சென்ற தங்களது பூமியை, மீண்டும் அடைய ஓர் வெறியோடும், பகையோடும் பூலோகா கோவிலை தேடுகின்றன .
ஆனால், உலகின் மாபெரும் அரசர்கள் இருவர் கையில் அவைகள் கிடைத்தன.
ஒருவன் மாவீரன் அலெக்ஸாண்டர்.
மற்றொருவன் சாம்ராட் அசோகா.
அகோராக்களின் வருகையை உணர்ந்த அலெக்ஸாண்டர் புத்தகத்தை ஓரிடத்தில் மறைத்தான். சாவியை தன் வசம் வைத்திருந்த அசோகா, யாரும் அதனை அடைய முடியாதபடி ஒளித்தான்.
ஆனால்,
சரித்திரம் மீண்டும் திரும்புகிறது.
பூமியில் மீண்டும் ஓர் பேரழிவு நேரப்போகிறது.
அதனைத் தடுக்க புத்தகங்களையும், சாவிகளையும் கண்டுபிடித்தே ஆக வேண்டும். ஆக, நாம் பல கோடி வருடம் மறைந்திருந்த பூலோகாக் கோவிலை மீட்டெடுத்தே ஆகவேண்டும் என்பது விதி.
கோவிலின் சக்தியை உணர்ந்து, உலகை ஆளும் ஆசைக் கொண்ட ராணுவப் படைக் கொண்ட அமெரிக்காவின் ஜேடன் ஜின்னா. பெரும்படைக் கொண்ட ரகசிய இயக்கத்தைச் சேர்ந்த எகிப்தின் பிளாக் ஸ்னைடர் மற்றும் அவனது வளர்ப்பு மகன் அலெக்ஸாண்டர். எல்லாவற்றுக்கும் மேலே மீண்டும் அதனை அடைய நினைக்கும், ராட்சஷ பலம் கொண்ட ஆயிரக்கணக்கான வேற்றுகிரக அகோராக்கள் பூமிக்கு வர காத்திருக்க,
ஆனால் விதி ,
மேற்ச்சொன்ன எல்லா கொடூரர்களையும் அழிக்கும், உலகைக் காக்கும் கடமை ஒரே ஒருவனிடம்.
அவன், அர்ஜுன்.
ம்ம்.. பல கோடி வருட ரகசியம் வெளிப்படும் காலமும் , ஓர் மாபெரும் அசாதாரண, உயிர் பலிக்கொண்ட , புதையல் வேட்டையும் ஆரம்பமாயின.
உங்களுடன்……..

About the Author

ப. சத்ய நாராயணன் ஒரு நாவல் எழுத்தாளர், சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுத்தாளர், திரைக்கதை பகுப்பாய்வி, யூடியூபர் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவர் ஒரு அதிரடி சாகச நாவலின் ஆசிரியர் ஆவார். இந்த நாவல் ஆசிரியரின் முதல் நாவல்தான் இந்த அகோரன் நாவல். சத்யா தனது குடும்பத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்.
கதை எழுதுவது அவரது ஆர்வம். அதைத் தொடர்ந்து புத்தகங்களைப் படித்தல், திரைப்படங்களைப் பார்ப்பது - கதை தொடர்பான அனைத்தும். உலக சினிமாவைப் பார்ப்பதிலும், திரைக்கதை முறையைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமாக உள்ளார்.

Connect with him on P.SATHYANARAYAN@YAHOO.IN.

Book Details

ISBN: 9781648280962
Publisher: Notion press
Number of Pages: 340
Dimensions: 5.5"x8.5"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

அகோரன்

அகோரன்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அகோரன்.

Other Books in Literature & Fiction, Sports & Adventure

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.