You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
சைவசமயமானது அருள்ஒழுக்கத்தையும், சிவபிரான் மாட்டும்அவன்அடியார்மாட்டும்ஏனையெல்லா உயிர்கள்
மாட்டும்அன்புபூண்டொழுகும்ஒழுக்கத்தையும்அறிவுறுத்துவதென்று உணரும்நல்வினை இல்லாத போலிச்சைவர்சிலர் சாதிவேற்றுமையே தாம்சைவசமயத்தாற்பெறும் மெய்யுணர்வாகும்என்று மயங்கி உணர்ந்து, அம்மயக்க வுணர்ச்சியைத்தம்மிடத்தும்தம்மோ டொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வதோடு அமைதிபெறாமல், அதனைத்தமக்கு இசைந்த பத்திரிகைகளினும்எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மைகளை உள்ளவாறே எடுத்து விளக்கிவரும்தவ வொழுக்கமுடைய பெரியாரையும்தமக்குள்ள பொறாமை
யாலும்இழிந்ததன்மையாலும்தமக்குத்தோன்றியவாறெல்லாம்இகழ்ந்து பேசுதலுஞ்செய்கின்றார். ஒருவருடைய
உயர்வுந்தாழ்வும்அறிவான்மிக்க சான்றோர்மதிக்கற்பாலரே யல்லாமல், அறிவில்லாக்குறும்பர்மதிக்கற்பால ரல்லர்; ஆகவே, அறிவில்லார்கூறும்இகழுரைகளையும்பொய்ம் மொழிகளையும்அறிவுடையார்ஒரு பொருட்டாக
எண்ணாராகலின்அவர்கூறும்பழிச்சொற்களை விடுத்து, அவர்கூறும்மற்றப்பகுதிகளில்உள்ள குற்றங்களை மட்டும்ஒரு சிறிது எடுத்துக்காட்டி மறுத்தல்அவர்கூறியவற்றைக்கண்டு ஆராய்ச்சி யுணர்வில்லாதார் மயங்காமைப்பொருட்டேயாம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்.