You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Saathi Vetrumaiyum poli Saivarum by Maraimalai Adigal first published in 1911.
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் - மறைமலை அடிகள்
சாதிவேற்றுமை பழையகாலந்தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந் நூல்களை ஒப்புக்கொண்டவர்கள் அவ்வேற்றுமையினைக் கைப்பற்றி யொழுகுதலே செயற்பால ரென்பது ஒருசாரார் கொள்கை.
சாதிவேற்றுமை பழமையாக உள்ளதென்றே கொண்டாலும், அதனைத் தழுவியொழமுகல் வேண்டு மென்பது பகுத்தறிவில்லார் கூற்றாம். பழையனவெல்லாம் நல்லன வாதலும் இல்லை, புதியனவெல்லாம் தீயனவாதலும் இல்லை;பழையனவற்றில் தீயனவும் உண்டு புதியனவற்றில் நல்லனவும் உண்டு. இவ்வுண்மையைச் சைவசித்தாந்த ஆசிரியருள் ஒருவரான உமாபதி சிவாசாரிய அடிகள் “தொன்மையவாம்
எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா” என்று அறிவுறுத்தருளினமையுங் காண்க.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்.