You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

(3 Reviews)

பெரியப்பாவின் காது

டான் அசோக் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு
Don Ashok
Type: Print Book
Genre: Literature & Fiction
Language: Tamil
Price: ₹150 + shipping
Price: ₹150 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

புறக்கணிப்பு, தனிமை, உறவுகளை மையமாகக் கொண்டு டான் அசோக் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பாக இந்த ‘பெரியப்பாவின் காது’ புத்தகம் வெளிவந்திருக்கிறது.

About the Author

எழுத்தாளர்களை அரசியல் அறச்சீற்றம் எதுவும் இல்லாமல் வெறும் கற்பனைப் புனைவுகளுடன் சுவாரசியத்தைக் கொடுப்பவர்கள், அரசியல் அறச்சீற்றம் மட்டுமே மேல் ஓங்கி இருக்கும் வாசிப்பு அனுபவத்தைத் தருபவர்கள் , கற்பனை அரசியல் எதுவுமே இன்றி வெறும் வாசிப்பு அனுபவத்தை மட்டும் தருபவர்கள் என வகைப்பிரிக்கலாம். இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு நான்காவதாக ஒரு வகை உண்டு. இவ்வகை எழுத்துகளில் நீங்கள் எதைப் பார்க்க நினைக்கின்றீர்களோ அது கிடைக்கும். கற்பனைப்புனைவா .. அளவற்று இருக்கும்... அரசியலா ... கலைஞர்த்தனத்துடன் நிரம்பி வழியும் ... சுவாரசிய பொழுது போக்கு வாசிப்பனுபவமா... சும்மா கில்லி பட அளவில் இருக்கும். அந்த நான்காவது வகை எழுத்தாளார்தான் நமது நண்பர் டான் அசோக் அவர்கள். சமூக ஊடகப்பரப்பை உபயோகப்படுத்திக் கொண்டு தனது எழுத்தாளுமையை நிரூபித்த வெகுசிலரில் வீச்சு, அடர்த்தி இரண்டையும் தன் எழுத்துகளில் எளிதாக வசப்படுத்தி வைத்து இருக்கின்றார் டான் அசோக்.

-செல்வகுமார் வினையூக்கி

Book Details

ISBN: 9781494700393
Number of Pages: 55
Dimensions: 6"x9"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

பெரியப்பாவின் காது

பெரியப்பாவின் காது

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

3 Customer Reviews

Showing 3 out of 3
Rajeshwaran 10 years, 11 months ago

Re: பெரியப்பாவின் காது

Great collection of short stories. The stories by DON almost covers all sort of feelings in a single book.And the way of narrating style the story is also different in each story...Enjoyed reading this book.. Please do not miss an good book and experience..

prabcas@gmail.com 10 years, 11 months ago

Re: பெரியப்பாவின் காது

போதையினால் மயக்கமுற செய்கிற கள்ளின் குணம் டான் அசோக்-கின் எழுத்துக்கு உண்டு. அவரின் எழுத்து நடையில் எள்ளலும்/ துள்ளலும் சற்று தூக்கலாகவும், வஞ்ச புகழ்ச்சிகள்/இகழ்ச்சிகள் அங்கும் இங்கும் தூவப்பட்டும், பாமரனுக்கும் புரிகிற ஜிகினாத்தனமில்லாத யதார்த்த மொழியோடு, அள்ள அள்ள சுவாரஸ்யம் கிலோகணக்கில் இலவசமாகவும் கொட்டிக் கிடக்கும். அவர் தரும் தலைப்பே சுவாரஸ்யத்தை கூட்டி வரும்.

இந்த ”பெரியப்பா காது”-ன் கதைகளை ஒன்றிரண்டை நான் படித்தபோதே அப்புத்தகக் காதை பாராசூட் போல பிடித்து கொண்டு அந்தரத்தில் பறந்தவனானேன்.

வாங்கி படிப்பவருக்கு ஆகாச பறப்பு இலவசம்.

ila.mdu 10 years, 11 months ago Verified Buyer

Re: பெரியப்பாவின் காது

அருமையான தொகுப்பு. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிக்கொண்டிருக்கிறார். முக்கியமாக "டான் அசோக்"கின் எழுத்து நடை, எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மேலும் இலக்கியம் படிக்காதோரையும் படிக்க வைக்க கூடும். நல்ல தமிழ் சிறுகதையை விரும்புவோர் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம், "பெரியப்பாவின் காது"

Other Books in Literature & Fiction

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.