You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
முதுமை என்பது எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் முதுமையை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் ஒவ்வொரு மனிதனும் வேறுபடுகிறான்.
"முதுமை எனும் பூங்காற்று" நூல் இருபத்தி ஒன்பது அத்தியாயங்கள் மூலம் முதுமையின் பிரச்சனைகளை ஆழமாக ஆராய்ந்து தெளிவாக விளக்கியிருக்கிறது. பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல் அவற்றுக் கெல்லாம் எளிமையான, செயல்படுத்தக் கூடிய தீர்வுகளை சொல்லி இருப்பது இந்த நூலின் தனித்துவம்.
இந்தத் தொகுப்பில் உள்ள இருபத்தி ஆறு கட்டுரைகள் இந்து தமிழ் நாளிதழின் ஒரு அங்கமான காமதேனு புத்தகத்தில் விவேக பாரதி என்ற புனைப் பெயரில் நான் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல ஊர்களில் இருந்தும் அதைப் படித்துவிட்டு வயதில் மூத்த, அனுபவம் மிக்கவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது மனதிற்கு மிகுந்த நெகிழ்வை தந்தது. அதனாலேயே இதனைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு சமூகத்தில் இந்த பிரச்சனைகளையும் அதற்குரிய தீர்வையும் கவனிக்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் ஒரு சிறிய முயற்சி தான் இந்தப் புத்தகம். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்து தமிழ் காமதேனுவைச் சேர்ந்த திரு .சண்முகம் அவர்களுக்கும் திரு.சந்திரமோகன் அவர்களுக்கும் பணிவு கலந்த நன்றிகள் வணக்கங்கள். மருத்துவத்துறையில் 50 வருடத்திற்கும் மேலான அனுபவம் உள்ள டாக்டர்.காந்தராஜ் அவர்கள் இந்த தொகுப்பிற்கு அணிந்துரை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணி அவரை தொடர்பு கொண்ட பொழுது இந்த வயதிலும் மிகப் பொறுமையாக முழுவதுமாக படித்து விட்டு தன்னுடைய...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book முதுமை எனும் பூங்காற்று.