You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
நல் இதயங்களே,
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்
“காதல்” காதல் என்று சொன்னாலே அனைவருக்கும் அவரவர்
வாழ்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவங்கள் நினைவுக்கு வரும்.
காதலிக்காத மனிதர்களே இல்லை…. அந்த அனுபவங்கள் சிலருக்கு
இனிமையாகவும் சிலருக்கு கசப்பாகவும் இருக்கும் சிலருக்கோ
ஆழமான சிற்பத்தை மனதில் செதுக்கி இருக்கும் அது போல தான் என்
காதலும்..
பொறியியள் படித்து முடித்த பட்டதாரி நான். கல்லூரியில் நான்
பொறியியளில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை கூடவே காதலையும் கற்று
தேர்ந்தேன். . அனைவரிடத்தும் சாரலாக வீசும் காதல் என்னிடத்தில்
மட்டும் ஒருபடி மேலே சென்று புயலாய் பெய்து அதில் மீழாமல்
தவிக்கிறேன்…
அவளோ ஒரு அழகு தேவதை..மழலைகளின் புன்னகையையும்
மலர்களின் விழிகளையும் உடையவள். அலவுகடந்த அன்பையும்
காதலையும் கொண்ட நான் அவளிடம் நிஜத்தில் வாழ்வதை விட
கனவிலே அதிகம் வாழ்ந்தேன்.அவளிடம் என்னை விட என் விழிகளே
அதிகம் பேசியது.. அவள் என்னிடம் சிந்திய முத்துக்களை எல்லாம் சேர்த்து
கோர்த்த மாலை தான் என் கவிதைகல்.
என் கவிதைகள் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் கன்டிப்பாக
அவள் மீது நான் கொண்ட அன்பை வெளிபடுத்துமென
நம்புகிறேன்.
பல காரணங்களால் அவள் என்னை விட்டு
பிரிந்தாலும் அவளோடு உள்ள நினைவுகளையும் கற்பனைகளையும்
ஏற்று உங்கள் மனதில் ஒன்றாக வாழ்வோமென நம்புகிறேன்..
என் நினைவுகலை உங்களோடு பகிர்ந்து கொள்ள
வாய்பளித்தமைக்கு நன்றி…
நன்றி
அன்புடன்
அ.சந்தோஷ் குமார்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book உன் நினைவுகள்.......