You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

கண்ணடக்கம் (eBook)

Type: e-book
Genre: Literature & Fiction, Politics & Society
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன. புரையோடி விட்ட புண்ணிலிருந்து கிளம்பிய துர்நாற்ற அருவிபோல் இருந்தது அந்தப் பக்தனின் முகக்காட்சி. தேவீ, தேவீ! காளிகா தேவீ!! என்று அலறல் வேறு.

நல்ல இருட்டு. கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளம். அதன்மீது ஒரு மூங்கில் பாலம். அதிலே நிதானமின்றிப் பக்தன் ஓடினான். கரையோரத்துச் சுடலையிலே எரிந்துகொண்டிருந்த ஒரு பிணத்தை ஆற்றுத் தண்ணீர் இழுத்துக்கொண்டு வருகிறது. அதைப் பக்தன் பார்த்தான். “லோக மாதா’’ என அலறிக் கொண்டே திரும்பினான். தீவட்டிகளோடு நாலைந்துபேர் வந்து கொண்டிருந்தனர். ஒருவன் கையிலே கொள்ளிச்சட்டி, பிணந்தூக்கிக்கொண்டு வந்தார்கள். இது ஆற்றிலே மிதக்கும் ஈரப்பிணமல்ல, புதிய பிணம். மூங்கில் பாலத்தில் பக்தன் நின்றான். ஒரே அமைதி. புதிய பிணம் எரிய ஆரம்பித்தது. அதன் சொந்தக்காரர்கள் பிரிந்து விட்டார்கள். இனி இது நெருப்புக்கோ, அல்லது ஆற்றில் தெரியும் வாளை மீனுக்கோ சொந்தம்.

About the Author

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.

Book Details

ISBN: 9788198443816
Publisher: Nilan Publishers
Number of Pages: 47
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கண்ணடக்கம்

கண்ணடக்கம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கண்ணடக்கம்.

Other Books in Literature & Fiction, Politics & Society

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.