You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
சிலப்பதிகாரம், தொட்டனைத்து ஊறும் ஒரு தமிழ்க்கேணி. அறிஞர்கள் தொடத் தொடக் கருத்துக்கள் சுரந்து சுரந்து பெருகியபடியே இருக்கின்றன. முத்தமிழ்க் காவலர், அவர்கள் தம்முடைய ஆழ்ந்தகன்ற தமிழ்ஞானப் பார்வையினாலே, சிலம்பின் நயங்களை எடுத்து இந்நூலின் மூலம் நமக்கு வழங்குகின்றார்கள்.
'கண்ணகி' அல்ல; 'கண்ணழகி' என்பதுதான் சிலப்பதிகாரக் காவிய நாயகியின் பெயர் என்று காட்டும்போது, நமக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. இப்படிப் பல நுட்பமான கருத்துக்கள் ஒளிசெய்கின்றன.
சிலம்பின் நயங்களையும் வளங்களையும் நாடெங்கும் முழக்கிச் 'சிலம்பொலி' என்றே அழைக்கப்பெறும் செல்லப்பனார் அவர்கள், இந்நூலின் சுவையுணர்ந்து துய்த்து, இந்நூற் குத் தம்டைய துய்ப்புரையினையும் அளித்து, இதன் சிறப்பை அறிமுகப்படுத்துகின்றார்கள். அவர்கட்கு எங்கள் நன்றி உரியதாகும். இந் நூலின் அச்சுப் பதிப்பிற்குப் பொறுப்பாயிருந்த ஆசிரியர் புலியூர்க் கேசிகன் அவர்கட்கும் எங்கள் நன்றி.
இந்தத் தமிழ்விருந்து அனைவருக்கும் இன்பமும் அறிவுநலமும் தரும் என்பதில் ஐயம் இல்லை.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book இளங்கோவும் சிலம்பும்.