You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
தமிழில் இதுவரை வெளிவந்த வரலாற்றுப் புதினங்கள் ஏராளம்! அத்தனையும் நான் அறிந்த வரலாற்றுக் காலத்தின் தகவல்களை, கதையாக புனைத்து எழுதப்பட்டவை. ஆனால் நம் தமிழோ, நாம் அறிந்த வரலாற்றுக் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முற்பட்டது. அதை சமீபத்தில் கிடைத்த கீழடி அகழ்வாய்வுகுகள் உறுதிப்படுத்தின. ஆனால் வரலாற்றுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியல், கலை, பண்பாடு, இறை நம்பிக்கை, காதல், வீரம், அறம் ஆகியவற்றை அறிய நம்மிடம் எந்த நூல்களும் இல்லை. இருப்பவை எல்லாம் கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவையே! இடைச்சங்க காலத்தின் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்ற சிந்தனை என்னுள் பல வருடங்களாகவே உறுத்திக் கொண்டது. பல்வேறு அகழ்வாய்வுகளின் அடிப்படையிலும், கடைச்சங்க கால நூல்களை அடிப்படையாகக் கொண்டும் இடைச்சங்க காலத்தைச் சார்ந்த இந்த கற்பனைக்கதையை வரைந்துள்ளேன். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிவாரத்த்தில் ஒரு நாள் நான் கண்ட ஓவியம் இக்கதைக்கான ஆணிவேரைத் தந்தது. இரண்டாம் கடற்கோள் வந்து கபாடபுரத்தை ஆழிப்பேரலை மூழ்கடிக்கையில், பாண்டிய மன்னான முடத்திருமாறன் பொன்னைத் தேடி ஓடவில்லை. கபாடமுத்துக்களைத் தேடி ஓடவில்லை. மாறாக அவனால் முடிந்த அளவு இன்தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டு தப்பிக்கிறான். அவனது தமிழ்ப்பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இக்கதைக்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது. வாருங்கள்! பாரதியையும், கம்பனையும், திருத்தக்க தேவரையும், இளங்கோவையும், வள்ளுவனையும், ஔவையையும், தொல்காப்பியரையும் காலத்தால் பின் தள்ளி இதுவரை நாம் காணாத, கேளாத ஒரு உலகத்துக்கு பயணிப்பபோம்!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கபாடபுரம் முதல் கீழடி வரை: வரலாற்று நாவல்: பாகம் ஒன்று: நளிமலை.