You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

கண்ணனின் திருக்கதை (eBook)

Type: e-book
Genre: Philosophy, Religion & Spirituality
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF, EPUB

Description

பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் எனப்படு கின்றன. வீர வரலாற்றைக் காவியமாகக் கூறினால் அஃது இதிகாசம் எனப்படுகிறது.

இஃது இதிகாசம் ஆகாது; தெய்வக்கதை; தெய்வம் மானிடனாக அவதரித்து மனிதனைப் போல இயங்கி, தெய்வசக்தியோடு செயல் ஆற்றி வாழ்ந்த கதை இது.

கண்ணனின் கதை. அவன் ஒரு மாவீரன் என்பதற்காகப் பேசப்படுவது இல்லை; பிள்ளைமை அழகுடையது. அனைவரையும் மகிழ்வித்தவன், 'வீரன்' என்றால், அஃது அருச்சுனனைத்தான் குறிக்கும்; அவன் செயல் சிறந்தது; அதற்கு வழிகாட்டி கண்ணன்; "வில் அம்பினைவிட அறிவு. கூர்மை வாய்ந்தது" என்பது இவனிடம் காணப்படுகிறது. வலிமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது; அறிவுக் கூர்மை; "இதுவே வெற்றி தரும்" என்பதனைக் கண்ணன் கதை காட்டுகிறது.

பிறந்த உடனே இடம் மாறிவிடுகிறான்; கம்சன் ஏமாற்றப்படுகிறான்; அவன் அறிவுத் திறன் அவன் குறும்புகளில் வெளிப்படுகிறது; தீராத விளையாட்டுப் பிள்ளை; பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்ற பெயர் வாங்குகிறான்; யோகிகளைப் போலச் சிரிக்காமல் அவன் வாழவில்லை; "பெரியவர் என்றால் சிரிக்கக் கூடாது." என்ற போலித்தனம் அவனிடம் இல்லை; அவன் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு புதுமை, ஒரு சிரிப்பு, ஓர் அற்புதம், திடுக்க வைக்கும் சாதனைகள் இவை எல்லாம் அவனை நேசிக்கச் செய்கின்றன.

About the Author

ரா. சீனிவாசன் (ராமானுஜலு சீனிவாசன்: 1923-2001) தமிழ்ப் பேராசிரியர். 'சங்க இலக்கியத்தில் உவமைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, குறள், மணிமேகலை போன்ற இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியுள்ளார். பொது வாசிப்புக்குரிய நாவல்களை, சிறுகதைகளை எழுதியவர்.

Book Details

ISBN: 9788199887794
Publisher: Nilan Publishers
Number of Pages: 117
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கண்ணனின் திருக்கதை

கண்ணனின் திருக்கதை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கண்ணனின் திருக்கதை.

Other Books in Philosophy, Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.