You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து - திரு. வி. கலியாணசுந்தரனார்
இந்நூற்கண் இளமை மாண்பு, அழகின் பெற்றி, இளமை யழகோம்பு முறைகள், காவியச் சிறப்பு, ஓவியத் திறன், இசை நுட் பம், நாடக நலன், சமரச சன்மார்க்கமென்னும் அன்பு நெறியே சமயமென்பது, கோயில் சீர்திருத்தம், தமிழ் மாண்பு, தமிழர் யார் என்பது முதலியன ஓதப்பட்டிருக்கின்றன; நாடு மொழி பிறப்பு முதலியவாற்றான் வேற்றுமை பாராட்டுவதால், சகோதர நேயத்துக்கு ஊறு நிகழ்தல் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டிருக் கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை முதலிய சிறுமைகளின் நீக்கம் நாட்டுக்கு விடுதலை நல்குவது என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது; கண்மூடி வழக்கவொழுக்கங்கள் மிக உரமாக மறுக்கப்பட்டிருக்கின்றன; வாழ்விற்குரிய வேறுபல சீர்திருத்தங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலின் உள் ளுறை இளைஞருலகிற்கு நல்விருந்தளிக்குமென்று கருதுகிறேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து.