You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
Saiva Samaya Saaram by Thiru. V. Kalyanasundaram published in 1921.
சைவ சமய சாரம் - திரு. வி. கலியாணசுந்தரனார்
உலகத்திலே பல சமயங்கள் நிலவுகின்றன. அவைகளுள் பெரும்பாலன கால தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம், பெளத்த சமயம் முதலிய சமயங்கள் தோன்றிய காலங்களைச் சரித்திரங்கள் கிளந்து கூறுகின்றன. ஆனால் சைவசமயமோ காலங் கடந்து நிற்கிறது. சைவசமயம் இன்ன காலத்தில் இன்னவரால் உண்டாக்கப் பட்டதென்று எவராலும் எந்நூலாலும் அளந்து கூற முடியாது. பழமையிற் சிறந்த இருக்கு வேதத்திலும், தமிழ் நாட்டுச் சங்க நூல்களிலுஞ் சிவமென்னுஞ் செம்பொருள் காணப்படுகிறது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும், பின்னைப் புதுமைக்குப் புதுமை யாயும் இலங்குஞ் சிவமென்னுஞ் செம்பொருளின் தொடர்புடைய சைவ சமயத்தின் கால வரை அளவிடற் பாலதன்று.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book சைவ சமய சாரம் ( Saiva Samaya Saaram ).