You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
தேசபக்தாமிர்தம் - திரு. வி. கலியாணசுந்தரனார்
தெய்வபக்தி, இராஜபக்தி, தேசபக்தி என்னும் மூன்றனை யும் வளர்க்கப் பிங்கள கார்த்திகைமீ 22உ (7-12-1917) தோன்றிய 'தேசபக்தன்' ஆசிரிய பீடத்திருந்து யான் இதுகாறும் எழுதி யுள்ள கட்டுரைகளிற் சிலவற்றைத் திரட்டிப் புத்தகவடிவ மாக்கி, அதைத் தமிழ்நாட்டில் உலவச் செய்யவேண்டுமென்று சில நண்பர்கள் என்னை நேரிற் கேட்டுக் கொண்டார்கள்; சிலர் எனக்குக் கடிதம் விடுத்தனர். நண்பர்கள் விரும்பிய வாறே 'தேசபக்த'னில் யான் எழுதிவரூஉம் கட்டுரைகளிற் சில வற்றைத் திரட்டிப் பகுதி பகுதியாக வெளியிடவேண்டு மென்ற எண்ணம் எனக்கும் உதயமாயிற்று.
'தேசபக்த'னில் யான் எழுதிவரூஉங் கட்டுரைகள் அடங்கும் புத்தகத்துக்கு எப்பெயர் கொடுக்கலாம் என்று சிறிதுநேரம் சிந்தித்தேன். அச்சிறிது நேரத்திற்குள் 'தேசபக்தாமிர்தம்' என்னும் பெயர் என்னுள்ளத்தில் பரிணமித்தது. அப்பெயரே இந்நூலுக்கு மகுடமாகச் சூடப்பட்டது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தேசபக்தாமிர்தம்.