You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
நினைப்பவர் மனம் - திரு. வி. கலியாணசுந்தரனார்
Ninaippavar Manam by Thiru. V. Kalyanasundaram was first published in 1930.
நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தேகொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,
மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பாங்கர், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் வெள்ளிவிழாக்கூட்டம் இன்று (29-8-1930) கூடியிருக்கிறது. இக்கூட்டத்துக்குத் தலைமைவகிக்கும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இப்பேற்றை எனக்கு வழங்கிய சமாஜ அமைச்சுக் குழுவினர்க்கும், வரவேற்புக்கூட்டத்தார்க்கும், ஈண்டு ஈண்டியுள்ள மற்ற அன்பர்கட்கும் எனது நன்றியறிதலைச் செலுத்துகிறேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book நினைப்பவர் மனம் ( Ninaippavar Manam).