You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
தொல்காப்பியம் பற்றி சில அறிஞர்கள்
1. பெரியார் – “தொல்காப்பியன் என்பவன் ஆரிய கைக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழருக்கு இலக்கணமாக செய்து விட்டு போனவன்.
யாம் அறிந்த வகையில் இவ்வளவு தெளிவாகவும், உறுதியாகவும் தொல்காப்பியத்தைப் பற்றி எதிர்மறையாக கூறியவர் வேறு யாரும் இல்லை.” இதனது உண்மை இந்நூலை படிப்பதால் விளங்கும்.
2. கார்த்திகேசு சிவத்தம்பி - சமஸ்கிருதமயமாக்கல் வளர்ச்சியும் சமூக வேறுபாடுகளின் வளர்ச்சியும் தொல்காப்பியத்தில் தெளிவாகத் தெரிகின்றன. தொல்காப்பியரின் முயற்சி தமக்கு முந்திய கால செய்யுள் பயில் முறைகளை கொடுப்பதுதான் எனில் சமஸ்கிருத அளவு கோளை தேடாமல் அதனை செய்து இருக்கலாம். பார்ப்பனர்களை முதலாவதாகவும், அரசரை இரண்டாவதாக வைக்கும் ஒழுங்கு சமஸ்கிருத முறையை சுட்டுகிறது. எனவே தொல்காப்பியர் சமூக வேறுபாடுகளுக்கு இலக்கண அங்கீகாரம் வழங்குகிறார்.
மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணரும் தொல்காப்பியரின் ஆரிய சார்புத்தன்மையையும் ஆரிய வழுக்கள் அந்நூலில் காணப்படுதலையும் அவருடைய மொழிநூல் 1 என்ற நூலில்சுட்டிச் செல்கிறார் [தமிழ் இணைய பல்கலைக் கழகம்]
இதை தவிரவும் சில முனைவர்கள் குறிப்பாக, முனைவர்.கோ. மாதய்யன் (தொல்காப்பியமும், சமூதாய படிநிலைகளும்) தமிழர் கண்னோட்டம் பொங்கல் மலர் 2006 பக் 80 - 87 முனைவர். இராமசுந்தரம் (சமுதாயவியல் நோக்கில் தொல்காப்பியம்[ தமிழர் கண்னோட்டம் பிப்ரவரி 2008] தொல்காப்பியத்தின் ஆரிய சார்பு நிலையை சுட்டியுள்ளனர்
இவர்தவிர மேலும் சிலர் இருக்கலாம் எனது அறிவுக்கும், ஆய்வுக்கும் எட்டியவர்கள் இவர்களே.
தொல்காப்பியர் என்பவர் யார்?
தொல்காப்பியம் சிறப்புப் பாயிரத்தில்
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தொல்காப்பியம் ; மெய்யும் பொய்யும்.