You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
ராஜ சாப்பாடு என்கிறோம், அது சில சமயம் அராஜகத்தை உண்டாக்கி விடுகிறது. ராஜ சாப்பாடு சாப்பிட்டு வருபவர் ஆரோக்கியமுள்ளவரை கும்பகர்ணர்தான். வயிறும் உடலும் தாங்க மறுத்துவிட்டால், ஆரோக்கியம் ஒரு கர்ணம் அடித்து தொடர் தொல்லை ஆரம்பித்து விடும்.
சமையற்காரருடைய ஒரே நிபந்தனை என்னவென்றால், சமையல் முடிந்தோ அல்லது முடிக்காமலோ அவர் மன்னரை விருந்திற்கு அழைத்தால், ஓரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உடனே அவர் வந்து விடவேண்டும், அப்படி மன்னர் உடனே வரத்தவறினால், சமைத்த அந்த உணவு மன்னருக்கு கொடுக்கப்படமாட்டது. அவர் மன்னருக்காக மீண்டும் சமையல் ஆரம்பித்து விடுவார், இதனால், மன்னர் நினைத்த நேரத்தில் உண்ண முடியாது, சமையற்காரர் அழைத்த நேரத்தில்தான் சாப்பாடு கிடைக்கும். இதில் சமையற்காரரின் தொழில் இரகசியமும், மன்னரின் பாதுகாப்பு விஷயமும் அடங்கியிருந்தது.
“....ஆரோக்கியமான யாரவது ஒருவர் அரசருடைய வயிற்றுடன் தன் வயிற்றை மாற்றிக்கொள்ள முன் வந்தால் அவருக்கு நவ தானியங்கள் மற்றும் நெல் விளையும் ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலமும், தென்னந் தோப்புக்களும், பழத்தோட்டங்களும், பல மாளிகைகளும், 10 கோடி பொற்காசுகளும், வைர வைடூரிய, மாணிக்க குவியல்களும், எருமை, பசுமாடு மற்றும் குதிரைப் பண்ணைகளும் இன்னும் அவர் கேட்கும் மற்றப் பொருள்களும் பரிசாக அளிக்க மாமன்னர் ஒப்புதல் தெரிவிக்கின்றார்....., டூம் டூம் டூம் என மேளம் கொட்டி, சங்கு முழங்கி, முரசு ஒலித்து, மற்றும் விவரங்களை அச்சடித்து நாடு முழுக்க செய்தி பரப்பப்பட்டது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மந்திரம் கால் மதி முக்கால்.