You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

அழகின் சிரிப்பு (eBook)

பாரதிதாசன் கவிதைகள்
Type: e-book
Genre: Literature & Fiction, Poetry
Language: Tamil
Price: ₹0
Available Formats: PDF

Description

தமிழுணர்வைக் கனலாய் கக்கும் பாவேந்தரை நாம் அறிவோம். இயற்கையின் அழகில் மனதைப் பறிகொடுத்தப் பாவேந்தரை நாம் அறிவோமா?
அழகின் மயக்கத்திலும், தமிழன்னையை மறக்காத தமிழ்ப்பற்று, நாம் கற்க வேண்டிய ஒன்றல்லவோ?

About the Author

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். எனினும் தமிழ்ப் பள்ளியிலேயே பெரும்பாலும் பயின்றார். தமது பதினாறாம் வயதில் கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வுக்காக இணைந்தார். பதினெட்டாவது வயதில் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாரானார். நண்பர் ஒருவரின் திருமணத்தில் பாரதியாருடன் அறிமுகம் ஏற்பட்டது.
இவரின் முதற் பாடல் பாரதியாரால் ‘சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்று எழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான பத்திரிகைகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் 'புரட்சிக்கவி’ என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

Book Details

Number of Pages: 79
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

அழகின் சிரிப்பு

அழகின் சிரிப்பு

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அழகின் சிரிப்பு.

Other Books in Literature & Fiction, Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.