You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
விச்சுளி ஆட்டம் என்பதொன்று தமிழ் நூற்களில் காணப் படுகிறது. அது கழைக்கூத்தைச் சேர்ந்த ஓர் அருஞ்செயல். மக்கள் உடற்பருமனில் பன்மடங்கு சிறிதான ஒரு நெடுந்தறியில் எதிரிலிருந்து காண்பார்க்குத் தெரியாதவாறு ஒருவர் பதுங்குவதே விச்சுளியாடல் என்பது.
சடையநாத வள்ளல், தொண்டைநாட்டுப் புழற்கோட்டத்து இருந்தவர்; இவர் பாண்டியன் வழிவந்தவர் என்பர். இவர்மேல் விச்சுளியாடவல்ல கழைக்கூத்தி ஒருத்தி காதல் கொண்டதை விளக்குவதான “மாகுன்றனைய” என்று தொடங்கும் பாடல் ஒன்று கேட்கப்படுகின்றது. சடையநாத வள்ளல் எவர் எதை வேண்டினும், இல்லை என்னாது கொடுக்கின்றவர். பகைவனால் அனுப்பப்பட்ட ஒருவன் சடையநாத வள்ளலிடம் வந்து, புகழ்ந்து பாடியபோது உமக்கு என்னவேண்டும் என்று கேட்க அதற்கவன் ‘அரசி முதுகில் சோறு படைக்க வேண்டும்' என்ன, அவ்வாறே அரசர், சூலுற்றிருந்த அரசி முதுகில் சோறிடச் செய்து உண்பித்தார். உண்ட அவன், தன் பகைவனால் ஒற்றறிய அனுப்பப்பட்டவன் எனத் தெரிந்து அவனைச் சிறையிலிட்டார் என்பர். இதுபற்றிச் சடையநாத வள்ளலைப் புகழும்,
“சூலி முதுகிற் சுடச்சுடஅப் போதமைத்த
பாலடிசில் தன்னைப் படைக்கும்கை”
என்ற ஒரு பாட்டும் கிடைக்கின்றது.
இவைகளை அடிப்படையாய் வைத்துக் கட்டப்பட்டதே இக்கட்டடம். இது சுருக்கமாக, முன்னர் என்னால் எழுதி வெளியிடப் பட்டது; அதைச் சிறிது பெரிதுபடுத்தி எழுதினேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கழைக் கூத்தியின் காதல்.