You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
என் கவிதை பற்றி சிலவரிகள்
அன்புள்ள என் வாசகர்களுக்கு என் முதல் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக கவிஞர்கள் என்றாலே அடுக்கு மொழியில் பேசுதல் மிகைப்படுத்தி பேசுதல் பொய்யாக சித்தரித்தல் என்று வாடிக்கையாக காணப்படுவார்கள். நான் அதில் இருந்து சற்று மாறுபடுகிறேன்.நானும் உங்களை போல வாசகனாக இருந்து சாதாரண சின்ன சின்னகருத்துக்களை சொல்லி வந்தேன் என் அனுபவங்களை கவிதை நடையில் சொல்ல ஆரம்பித்தேன் அது பலரைக் கவர்ந்தது நான் உண்மையை உரக்க சொல்வதால் பலருக்குப் பிடித்தது இப்படித்தான் என் கவிதைபயணம் தொடங்கியது.. காஜா புயலை பற்றி நான் எழுதிய கவிதையில் இருந்து என்னுடைய எழுத்து அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
நான் பல ஆண்டுகள் பல காலங்களில் நடந்த அனைத்து
அனுபவ நிகழ்வுகளையும் என் மனதில் கருவாக சுமந்து பாதுகாத்து வந்தேன் அதில் கலவையாக வாழ்க்கைக்கு தேவையான நாம் சந்திக்கக்கூடிய அனைத்தும் உள்ளது இந்த கவிதை புத்தகத்தில். இத்தனை ஆண்டுகள் சுமந்து வந்த கருவை பிரசவித்து அதற்கு உங்கள் பார்வைக்கு என் அனுபவ கருத்து கலவை என்று பெயரிட்டு உங்கள் கரங்களில் தவழ விடுகிறேன். இந்த புத்தகம் சுமந்து வரும் அனுபவ கருத்து கலவை உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். அனைத்தும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டது.
இந்த கருத்துக் கலவை கண்டிப்பாக உங்கள் கவலைகளை போக்கி உணர்வுபூர்வமாக சிந்தனைகளை தூண்டி உணர்வுகளைத் தட்டியெழுப்பும் என்பதில் எனக்கு துளிகூட சந்தேகமில்லை. உங்கள் ஆதரவில் எனது அடுத்த படைப்புகள் தொடரும்.
உங்கள் ஆதரவை நாடும் நண்பர் பி.முத்துக்குமரன்.
அனைத்துக்கவிதைகளும் உயிரோட்டம் உள்ள பொக்கிஷங்களே
படிக்க படிக்க ருசிக்கும் கவிதைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களே. ஆசிரியர் கவிதைகள் சொல்லியிருக்கும் விதம் அருமை.