You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
வேளாளர் நாகரிகம் - மறைமலையடிகள்
Velaalar Nagariam by Maraimalai Adigal was first published in 1923.
நமக்கு நண்பராயுள்ள சைவ வேளாளர் சிலர் வேளாளரின் பண்டை உண்மை வரலாறுகளை ஆராய்ந்து ஒரு
கட்டுரை விரைந்தெழுதும்படி எம்மைப் பெரிதுவேண்டினர். பண்டைக்காலந் தொட்டு நம் செந்தமிழ் மக்களில் நாகரிகத்தாற் சிறந்து வாழ்ந்து, தமிழ்மொழியையுஞ் சிவ வழிபாட்டையும் நிலைநிறுத்தி ஆரியரையுந் திருத்தி நல்வழிப் படுத்தினோர் வேளாளரே என்பது எமது ஆராய்ச்சியில் நன்கு புலப்பட்டமையால், “வேளாளர் யாவர்?” என்பதனை விளக்குகையில் “தமிழரது நாகரிகத்” தையும் உடன் விளக்க வேண்டுவது இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று.
ஆகவே, யாம் முன்னர் எழுதக் குறித்திருந்த “தமிழர் நாகரிகம்” என்பதனையும் இதன்கண் விரித்து விளக்க இடம் பெற்றேம்.ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகும் முன்னரே தமிழர் நாகரிக வாழ்க்கையில் முதிர்ச்சிபெற்று நின்று, பின்னர்த் தம்மொடு வந்து கலந்த அவ்வாரியரைத் திருத்தினமை இதன்கண்
நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book வேளாளர் நாகரிகம் ( Velaalar Nagariam ).