You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
புதிய தமிழகம் (கட்டுரைகள்)
மா. இராசமாணிக்கனார்
Puthiya Tamizhagam by Dr.M.Rasamanikkanar
அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்ற விருக்கும் நிலையில், அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும், புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே ! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும். "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று தொல்காப்பியர் காலத்தில் எழுந்த குரல் கி. பி. 17-ஆம் நூற்றண்டு வரை வேங்கடமே தமிழகத்தின் வட எல்லை என்பதை வலியுறுத்தி வந்துள்ளது. சங்க இலக்கியங்களும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய பல்வர் காலத்து இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், பின் வந்த சோழர் கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், அவருக்குப் பின் வந்த விசயநகர வேந்தர் காலத்து இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் வேங்கடத்தைத் தமிழகத்தின் வடஎல்லை என்றே கூறுகின்றன.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book புதிய தமிழகம் (கட்டுரைகள்) ( Puthiya Tamilagam ).