You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
பரோக்ஷ ராமாயணம் எனும் இந்த சிறிய சம்ஸ்க்ருத காவியம் நான் வசிக்கும் வீட்டினால் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டது. . பிரம்மஸ்ரீ ஆர் ரங்கன் ஜி இல்லத்திற்கு குடிபெயர்ந்து செல்லும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. ஸ்ரீ ரங்கன் ஜி,
ராமாயணம், பாகவதம் மற்றும் பக்தி இலக்கியங்கள் பற்றிய தனது அறிவார்ந்த சொற்பொழிவுகளுக்காக ஆஸ்திகர்களிடையே உலகளவில் போற்றப்படுபவர். அவரது வீட்டின் கூடத்தில் ஒரு சுவர் முழுவதும் 50 வண்ணமயமான படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த 50 படங்களில் ராமாயணத்தின் முழு கதையும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் அந்தப் படங்களைப் பார்த்து 50 ஸ்லோகங்களை இயற்ற இது என்னைத் தூண்டியது. ஶ்ரீராமனின் அருளால் என்னால் அதை முடிக்க முடிந்தது.
இந்த முயற்சியில் புதுமையைச் சேர்க்க, ஒவ்வொரு ஸ்லோகமும் பரோக்ஷ லிட் லகாரத்தில் (தொன்மைசார் இறந்த காலம்) உள்ள ஒரு வினைச்சொல்லுடன் தொடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் லிட் லகாரத்தின் பயன்பாட்டை ஆராய்வதில் ஆர்வத்தைத் தூண்டலாம். இந்த வெளியீட்டில் அனைத்து 50 ஸ்லோகங்களும் தேவநாகரி வரிவடிவத்திலும், தமிழ் வரிவடிவத்திலும் தமிழ் மொழிபெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளன. முடிவில் ஸ்லோகங்களின் அகரவரிசையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் லிட் லகரத்தில் உள்ள வினைச்சொற்களின் அகரவரிசையும் அவற்றின் வேர், பின்னொட்டு மற்றும் வினைச்சொற்கள் பயன்படுத்தப்படும் ஸ்லோகத்தின் எண்ணிக்கையும் வழங்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்களும், சம்ஸ்க்ருத ஆர்வலர்களும் பரோக்ஷ ராமாயணம் எனும் இந்த நூலுக்கு நல்லாதரவு அளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பரோக்ஷ ராமாயணம்.