You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
கலை வாழ்க்கையின் கண்ணாடி என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கைக் கலையில் பிரதி பலிக்கப்படுவது உண்மை ஆனால், வெறும் வாழ்க்கையே கலையாகி விடுவதில்லை, வெறும் கண்ணாடியில் பிம்பம் படியாதது போல.
கண்ணாடியில் பிரதிபலிப்பு ஏற்பட, பாதரசப் பூச்சு தேவை மாகிறது. வாழ்க்கைச் சம்பவங்களும், உணர்ச்சிகளும் கலையாக வேண்டுமானால் எழுத்தாளனது மனோபாவம் - கற்பனை என்ற ரசப்பூசல் அவசியம்.
அதனால், கதை சொல்லும் கலை, எழுத்தாளனது மனப் பண்பைப் பொறுத்தது: அவனது விருப்பு-வெறுப்புகளை அஸ்திவாரமாகக் கொண்டு தான் உருவமாகிறது. ஆகையால் எல்லோரும் இப்படி இப்படித் தான் எழுதுவார்கள், சிறுகதைகள் இந்த இந்த ரீதியில் தான் இருக்க வேண்டும் என்று எல்லை கட்டி விட முடியாது. எல்லோரும் வாழ்க்கையை ஒரே விதமாகத் தான் காண்பார்கள் என்று கூற முடியா தல்லவா? பிரதிபலிக்கும் கண்ணாடிகளில், பொருள்களைச் சரியாகவும், பெரிதாகவும் சிறிதாகவும், கோணலாகவும், உப்புதலாகவும், விசித்திரம் விசித்திரமாகக் காட்டும் பல ரகங்கள் இருக்கின்றன. அப்படித் தான் மனித மனக் கண்ணாடியும். அதன் போக்கே அலாதி.
அத்தகைய மனதில் சிருஷ்டியான சிறுகதைக் கலை அகண்டமானது. ரகம் ரகமானது. அதற்கு எல்லை கிடையாது; கதைக்குரிய விஷயம் இது இது தான், அவற்றை இப்படி இப்படித்தான் சொல்ல வேணும் என்ற இட்டு திட்டம் கிடையாது. அதாவது, காவியம் எழுதுகிறவன் நாட்டுப் படலம், ஆற்று வர்ணனை அணி வர்ணித்து நகர்சிறப்பு, வீதி மகிமை என்று குல முறை கிளத்துப் படலங்கள் வகுத்து, முன்னேறி விதிப்படி செல்ல வேண்டும் என்ற இலக்கணத் தொல்லைகள் எதுவும் சிறுகதை எழுத்தாளனுக்கு இல்லை.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கல்யாணி முதலிய கதைகள்.