You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
'படார் என்ற சப்தம் அறிவித்தது, வந்து நின்ற காரிலிருந்து ஆள் இறங்கியாயிற்று என்பதை.
காரின் கதவைப் பலமாக அறைந்து மூடிவிட்டு, குதிங்கால் உயர்ந்த பூட்ஸ்கள் 'டக்...டிக்.. டக்' என்று லாடங் கட்டிய குதிரையின் காலடி ஓசைபோல் - கட்டியம் கூற 'அம்மாளு' நடந்து வருகிறாள் என்பதை அறையில் இருந்துபடியே ஆராவமுதர் உணர முடிந்தது.
இயல்பாக அவரது கண்கள் கடிகாரத்துக்குத் தாவின. நெடுமூச்சு ஒன்று உயிர்த்தார் ஸ்ரீமான்!
மணி ஒன்பது ஐம்பத்து ஒன்று. பத்துமணியாக இன்னும் ஒன்பதே நிமிஷங்கள்! அம்மாளுக்கு இப்ப தான் வீட்டு நினைவு வந்தது போலிருக்கு !..ஊம்
நெஞ்சொடு புலம்பி நின்ற ஸ்ரீமான் ஆராவமுதரின் குமுறலுக்குக் குளுமைதர வரும் தென்றல் போல் வந்து சேர்ந்தாள் லேடி கனகம், 'ஹல்..லோ !' என்றபடி.
"நாகரிகச் சரக்குகளின் நடமாடும் விளம்பரம்" மாதிரி வந்து நின்றவளைப் பார்த்தும் பாராதது போல நடிக்க முயன்றார் அவர். அவளுக்குத் தெரியாதா என்ன, அவரது பம்மாத்துக்கள்!
'ஓஹ்ஹோன்னாளாம்! இன்னைக்கி எடிட்டர் சாருக்கு ரொம்ப ரொம்ப சிந்தனை வேலை போலிருக்கு!..பாவம்! இந்த பொது ஜனங்களுக்கு ஒரு எழவுமே புரியவில்லை. அவர்களை அறிவுபெறச் செய்வான் வேண்டி நமது ஆசிரியர் எவ்வளவு உழையா உழைத்து, எவ்வளவு தியாகங்கள் செய்கிறார் என்பதை ......'
'ஷட் அப் என்று உறுமினார் ஐயா. அலறி அடித்து ஒடுங்குபவள் போல நின்று குறும்பாக அவரை நோக்கினாள் கனகம் .
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மத்தாப்பூ சுந்தரி.