You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
எனது சென்ற படைப்பில் தமிழ் புத்தகத்தில் காலப்பயணம் சாத்தியமே என்பதை என் வார்த்தைகளை என் எழுத்துக்களில் நிரூபித்துள்ளேன் . அந்தக் கதையை உருவாக்க மனதில் தோன்றிய கற்பனைகளை முழு வடிவிற்கு கொண்டு வருவதற்கு எனக்கு சில ஆண்டுகள் ஆயிற்று ஆனால் அந்தக் கதையின் முடிவில் ஏன் இவ்வளவு ஆண்டு பயணத்தை ஒரு சிறு புத்தகத்துக்குள் அடைக்க வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் தோன்றியது அதனால் அந்த புத்தகத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்தை எழுதியுள்ளேன் இந்த பயணம் மேலும் தொடர வேண்டும் என்ற எண்ணமும் என் மனது ஆணி அடித்தது போல பதிந்துள்ளது.
இந்தக் கதையின் நாயகி காலப்பயணம் செய்து தான் இழந்த தன் குடும்பத்தை எவ்வாறு திரும்பப் பெறுகிறாள் என்பதையும் சென்ற கதையில் தமிழரின் போர் விலங்காகிய யாழிக்கென சிறப்பான ஒரு இடத்தை கொடுத்திருந்தேன் அதேபோல் இக்கதையிலும் ஒரு வித்தியாசமான யாழியை உள்ளே கொண்டு வந்துள்ளேன் வாசகர்கள் ஆகிய நீங்கள் எதிர்பார்ப்பது போலவே பல திருப்புமுனைகளையும் பல ஆச்சரியங்களையும் உள்ளே கொண்டு வர முயன்றுள்ளேன் இதுபோல இன்னும் மேன்மேலும் பல கதைகளை எழுதுவதற்கு வாசகர்களாகிய நீங்களே ஆசி புரிய வேண்டும்.
மனிதனின் மனநிலை என்பது அவன் வாழ்க்கை சூழ்நிலையை பொருத்தது அதனால் சூழ்நிலைக்குப் பயந்து அதில் மாட்டிக் கொள்வதும் அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நமக்கு ஏதுவாக மாற்றிக் கொள்வதும் அதே மனநிலை தான் அதனால் எப்பொழுதும் மனதை ஒரு வழிபடுத்தி நமக்கான தேடல் என்ன என்பதில் முழு நோக்கத்துடன் இருந்தால் எப்பேர்ப்பட்ட காலநிலையும் நமக்கு சாதகமாக அமையும்.
Lovely
The book's plot is captivating, filled with unexpected twists and turns that kept me hooked from start to finish.