You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
Poimaan Karadu By Kalki krishnamurthy
சேலம் அருகே உள்ள பொய் மான் கரடு எனும் ஊரில் நடக்கும் ஒரு சுவாரசியமான திருடன் போலீஸ் கதை , இதில் செங்கோடன் எனும் முரட்டு கருமியும் செம்பா எனும் அறிவு செல்வியும் ஒரு பொய் மானின் சதியில் சிக்கி கொள்கிறார்கள் . காதல் காட்சிகள் , புதையல் வேட்டை , திருடன் போலீஸ் விளையாட்டு என்று அனைத்து சுவையையும் வெறும் 116 பக்கங்களில் பரிமாறியிருகிறார் கல்கி . கல்கியின் எழுத்து வன்மையை பற்றி தெரிய விரும்புவோருக்கு இது ஒரு நல்ல Gateway .
தஞ்சை மாவட்டத்தில் தோன்றிய "கல்கி" தமிழ் இலக்கியத்தில் தமக்கெனத் தனி இடம் அமைத்துக் கொண்டவர். தமிழ்மொழியில் புதினத்துறைக்கு வித்திட்டவர் இவரேயெனலாம். நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர். திரு.வி.க. விடம் பயிற்சி பெற்றவர்; "கல்கி" இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சமூக, வரலாற்றுப் புதினங்களையும் கணக்கற்ற சிறு கதைகளையும், கற்போர் உள்ளத்தைக் கவர்கின்ற கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற புதினங்கள் இவர்தம் புகழை இறவாத் தன்மைத்தாக ஆக்குகின்றன.
கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927-ல் வெளியானது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பொய்மான் கரடு.