You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் - மறைமலையடிகள்
Murkaala Pirkaala Tamilpulavor by Maraimalai Adigal first published in 1936.
முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப்புலவர்கள் தமதருமைச் செந்தமிழ்மொழியைத் தம் இன்னுயிரினும் விழுமிதாக ஓம்பிப்,பொய்சிறிதுங் கலவா அறவுரையே பகருந் தமது நாவால் மெய்ப்பொருள்களையே நிரப்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்து வந்தனர். அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய நந்தாமணி விளக்குப்போல், தனது பொங்கு பேரொளியை எங்கணும் வீசி, இவ்வுலகின் கண்ணிருந்த மாந்தரெல்லாருடைய அறிவுக் கண்ணையும் விளங்க விளக்கிற்று. மற்றுப் பிற்காலத்தே, அஃதாவது சென்ற அறுநூறு ஆண்டுகளாகத், தோன்றிய தமிழ்ப் புலவர்களோ பெரும்பாலுந் தம்முன்னோர் சென்ற நெறியே தேர்ந்து செல்லாதவர்களாய், அவர் சென்ற மெய்ந்நெறி பிழைத்துப், பொய்ந்நெறி ஏகித் தமதருமைச் செந்தமிழ் மொழியின் தூய்மையை ஓம்பாது, அதனைப் பிறமொழிச் சொற்களொடு கலந்து மாசுபடுத்தியதல்லாமலும், அதன்கண் மெய்யல் லாதனவும் முழுப் பொய்யும் மிடைந்த பாவும் நூலும் இயற்றி அதன் மெய் வழக்கினையும் பாழ்படுத்தி விட்டனர். அவ் விருதிறமும் பிரிந்து நனிவிளங்க விளக்கிக் காட்டினாலன்றி, இனித் தமிழ் கற்பார் தமிழ்மொழியினையும் அதனை வழங்கும் மக்களையும் பேணி வளம்படுத்தாரெனக் கருதியே இந் நூலை இயற்றலானேம். இதனைப் பயில்வார் பண்டைத்தமிழ் நல்லிசைப் புலவரின் அளக்கொணா மாட்சியும் மெய்வழக்கும் நன்கறிந்து, அவர் ஒழுகிய மெய் யொழுக்கத்தையே கடைப் பிடித்துத், தாம் மிக்குயர்வதொடு, தமிழையுந் தமிழ்மக்களை யும் மிக்குயரச் செய்வார்களாக!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்.