You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
அனிச்ச மலர் - நா. பார்த்தசாரதி
Anicha Malar by Na.Parthasarathy
Pages - 152
இந்த நாவல் நான் எழுதியிருக்கும் பிறநாவல்களிலிருந்து பலவிதங்களில் தனியானது. அளவில், முறையில், அணுகுதலில், பாத்திர அமைப்பில் எல்லாவற்றிலும்தான். இது அலை ஒசையில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போது எங்கோ நிஜமாக நடந்த கதை போலிருக்கிறதே என்று சிலர் அடிக்கடி சொன்னார்கள். எங்கேனும் நடந்ததோ அல்லது நடக்கிறதோ?-என்ற எண்ணத்தை உண்டாக்கும் தன்மையே ஒரு கதையின் யதார்த்த நிலைக்குச் சரியான நற்சான்றி தழாகும். ஒரு தினசரியில் வெளிவந்தும், இந்த நாவலை நிறையபேர் படித்திருக்கிறார்கள். எனக்கு வந்த கடிதங்களிலிருந்தும் என்னிடம் விசாரித்தவர்களின் காரசாரமான விமர்சன விவாதங்களிலிருந்தும் இதை நான் தெரிந்து கொண்டேன். சில நண்பர்கள், குறிஞ்சி மலர்ை எழுதின நீங்கள் அனிச்ச மலர்ை எழுதலாமா? பூரணியைக் கதாபாத்திரமாகப் படைத்த நீங்கள் சுமதியையும் கதாபாத்திரமாகப் படைக்கலாமா?-என்றெல்லாம் கேட்டது உண்டு. அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இந்த முன்னுரையில் நான் பதில் சொல்ல வேண்டியது அவசியமும் முக்கியமும் ஒரு விதத்தில் அவசரமும் கூட ஆகிறது. குறிஞ்சி மலரும், பூரணியும் முன் உதாரணமாகக் கொள்ள வேண் டிய கதையும், கதாபாத்திரமும் ஆகமுடியும் என்றால் அனிச்ச மலரும் சுமதியும் முன் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டிய கதையாகவும், கதாபாத்திரமாகவும் ஆவதற்கு ஏன் முடியாது? உடன்பாடான சமூகப் படிப்பினைகளை ஏற்கத் தயாராயிருக்கும் நம்மவர்கள் எதிர்மறையான சமூகப்படிப்பினைகளை ஏனோ ஏற்கத் தயங்குகிறர்ர்கள். இன்னும் சிலர், "சினிமா உலகின் சீரழிவுகளையும், சினிமா உலகின் ஊழல்களையுமே சமீபத்தில் ஒவ்வொரு கதையிலும் அழுத்திச் சொல்லுகிறீர்களே, வேறு எவையும் வேறு யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா சார்?" என்று கோபமாகக் கேட்கிறார்கள். நான் சினிமாவை வெறுப்பவனில்லை, ஆனால் அது இன்றுள்ள நிலையில் அப்படியே அதை ஏற்றுக்கொண்டுவிட விரும்புகிறவனு மில்லை. அதில் பல விஷயங்கள் மாற வேண்டும். திருந்த வேண்டும்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அனிச்ச மலர்.