You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
கபாடபுரம் என்பது நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட இலக்கிய புதினம் ஆகும். இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடங்களும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம், கபாடபுரம், இறையனார் அகப்பொருள், முச்சங்க வரலாறு போன்றவை தொடர்பான செய்திகளை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது.
கதைச் சுருக்கம்:
கபாடபுரம் என்ற பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரத்தில் அமர்ந்து பாண்டி நாட்டை அனாகுலப் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆழ்கிறான். இவரது தந்தையாரான வெண்டேர்ச் செழியன் (முதிய பாண்டியர்) என்பவரே இடைச்சங்கத்தையும் கபாடபுரத்தையும் நிறுவிய முதலாம் பாண்டிய மன்னர். இவரது அநாகுல பாண்டியன் வழி மகனான சாரகுண பாண்டியன் (இளைய பாண்டியன்) என்பவனே இப்புதினக் கதையின் நாயகனாவான்.
குருகுலக் கல்வியை அவிநயனார் மற்றும் சிகண்டியார் என்ற அகத்தியரின் சீடர்களிடம் கற்று முடித்த சாரகுணன் கபாடபுரத்தைக் காண நீண்ட நாள் கழித்து ஒரு திருவிழா நாளில் வருகிறான். வரும் வழியில் கண்ணுக்கினியாள் என்ற பாணர் குலப் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இக்காதலை அறிந்து கொள்ளும் வெண்டேர்ச் செழியன் மன்னர்களுக்கு கலைகளின் மீதும் பெண்களின் மீதும் அதிக நாட்டம் இருக்கக்கூடாதென்று கூறி சில அரச வேலைகளைக் கொடுத்து அவனின் நோக்கத்தை அரசத்தந்திரங்களில் திருப்ப முயல்கிறார். இசை மீதும் கண்ணுக்கினியாள் மீதும் தீராத காதல் கொண்ட சாரகுணனின் போக்கு அரச தந்திரங்களில் அவ்வளவாக திரும்பாமல் இருக்கிறது. கடம்பர், அவுனர் போன்ற திருடரினத்தைச் சேர்ந்தவர்கள் கபாடபுர முத்து மற்றும் ரத்தினங்களை கொள்ளை அடிக்கும்...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கபாடபுரம்.