You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
குறிஞ்சி மலர் By Na.Parthasarathy
Kurinji Malar By Na.Parthasarathy
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஞானமும் மோனமும், அன்பும் அருளும், செம்மையும் சீர்மையும் மேலோங்கிக் கவியும் காவியமும் வீறுபெற்று வாழ்ந்த ஒரு காலத்தில் ஒலித்த குரல் இது! தமிழ்ப் பெண் எப்படி இருக்க வேண்டுமென்று இலக்கணம் வகுக்கிற குரல், கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ்ப் பெண் குலம். தமிழ்ப் பெண்குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில் தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக் கைகளில் வளை யோடு தமிழும் வாழ்ந்தது. தமிழோடு தமிழ்ப் பண்பும் வாழ்ந்தது. தமிழ்ப் பண்போடு குடியும் வளர்ந்தது. இன்றும் நம்மை விட்டு விலகிவிடாமல் காத்துவரும் பண்பையும், ஒழுக்கத்தையும் தமது குருதியோடு குருதியாகக் கலந்து நிற்கும் அறத்தையும் இப்படி நித்தியமாய் நிரந்தரமாய் நிர்மலமாய்த் தொடர்ந்துவந்து கொண்டிருக்கும்படி அளித்தவள் எந்தத் தமிழ் முதல் பெண்ணோ அவளுடைய பொன்னார்ந்த செந்தாமரைச் சீரடிகளை, வணங்கிவிட்டு இந்தக் கதையை எழுதத் தொடங்குகிறேன். இங்கே அந்த வாக்கியத்தை எழுதி முடிக்கும் போது மெய் சிலிர்த்துக் கண்களில் நீரரும்புகிறது. கோயிலுக்குள் நுழைவதுபோல் மனமும், உடலும் புலன்களும் தூய்மையை உணருகின்றன. எப்போதோ இருந்து மறைந்து இப்போது இல்லாமற் போனாலும், என்னில் என்னுடைய இரத்தத்தில் என்னுடைய புனிதமான நினைவுகளில் கலந்து வாழ்ந்து வரும் அந்த மாபெரும் தாய்க் குலத்தை நினைக்கிறேன்! அப்படி நினைக்கும் போது என் உடலில், உயிர் நாடிகளில் ஒரு புதிய சக்தி பாய்வதை அறிகிறேன்.
அறிவுப் புயலாய் வீசி மறைந்த அவ்வையார் எங்கே? தொண் டும், சமயமும் வளர்த்து ஞானச்செல்வியராய்ச் சுற்றித் திரிந்து புகழ் சுமந்த குண்டலகேசி எங்கே? மணிமேகலை எங்கே? கற்புக்கனல் எழுப்பிப் புகழ் சோதியாய் நிலைத்த கண்ணகி எங்கே? நரையாத குழலும், திரையாத முகமும், குறையாத நிறைவும் கொண்டு வரையாத சித்திரம் போல் அழகுடன் கன்னி யாகவே வாழ்ந்து நிறைவு கண்ட திலகவதி எங்கே? கணவனே வணங்கும் பெண் தெய்வமாய் உயர்ந்த காரைக்கால் அம்மை எங்கே? தமிழ்ப் பெண்குலம் என்ற வளமான நிலம் வரண்டு விட்டதா? புண்ணிய வித்துகள் மறுபடியும் அதில் பரவி முளைத்துக் கிளைத்து முகிழ்த்துச் செழித்து வளர்வது எப்போது? திரு.வி.க கண்ட பெண்ணின் பெருமை எங்கே? அவளுடைய புகழார்ந்த பரம்பரை எங்கே? அடுத்து வரும் புதிய தலைமுறையினருக்கு எழுத வேண்டிய புதிய சரித்திரத்தில் எந்தத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி எழுதுவது? எப்படி எழுதுவது? எதை எழுதுவது? தமிழ் நாட்டின் பொதுவாழ்வில் இன்று மலிந்து வரும் குறைகளையும் குழப்பங்களையும் நீக்கி ஒளிபரப்புவதற்குத் தாய்க்குலத்திலிருந்து மறுபடியும் ஒரு ஞானச் சுடர் தேவை. தொட்டதையெல்லாம் விளங்கச் செய்யும் பொலிவு வாய்ந்தது தமிழ்ப் பெண்மரபு. அந்த மரபிலிருந்து இந்த நாட்டு வாழ்க்கை யையே மாற்றியமைக்கும் பண்பு வாய்ந்த இலட்சியப் பெண்கள் பிறக்க வேண்டும்! அப்படி ஓர் இலட்சியப் பெண் இதை எழுதுகிறவனுடைய கனவில் பிறந்தாள். கற்பனையில் தோன்றி 'என்னைக் காவிய மாக்குங்கள் என்றாள். இந்தக் கதையிலும் அவள் பிறக்கிறாள்; இனி நாட்டிலும் பிறப்பாள். பிறக்க வேண்டும் என்பது இந்தக் கதையை எழுதுகிறவனுடைய ஆசை வணக்கம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book குறிஞ்சி மலர்.