You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் எத்தனையோ கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைகள் மற்றும் பல பயனுள்ள தகவல்கள் நாள்தோறும் நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் நாம் மெய்மறந்து சிரித்த மற்றும் இரசித்த பதிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் நம் நண்பர்களுக்கு ‘Forward’ மட்டுமே செய்கின்றோம். சிறிது நாட்களில் நாம் ரசித்த அந்த சுவாரசியமான மற்றும் சில அறிய தகவல்களை மறந்தும் விடுகின்றோம். இப்புத்தகம் என்னைக் கடந்து சென்ற அப்படிப்பட்ட சுவாரசியமான தகவல்களின் தொகுப்பே ஆகும். கடந்த காலங்களில் நான் ரசித்த நகைச்சுவைகள், கதைகள், கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் பல சுவையான தகவல்களை இப்புத்தகத்தில் வழங்கியுள்ளேன். இதுவும் ஒருவகையில் ‘Forwarding’ செய்வதுதான் வாட்ஸ்ஆப்பிலிருந்து வாட்ஸ்ஆப்பிற்கு இல்லை வாட்ஸ்ஆப்பில் இருந்து புத்தக வடிவிற்கு.
‘உன் நண்பன் யார் என்று சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது பழமொழி. ஆனால் உன் வாட்ஸ்ஆப்பை காட்டு உன் நண்பர்களைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது இன்றைய புதுமொழி. இப்புத்தகத்தில் உள்ள தொகுப்புகளைப் படிக்கும்போது என் நண்பர்களைப் பற்றியும் என் மாணவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இப்புதிய முயற்சி உருவாவதற்கு முக்கியக் காரணம் இன்றைய இளைஞர்களுக்குச் சமூக ஊடகங்களை இப்படியும் பயன்படுத்தலாம் என்று தெரிவிப்பதற்காகவும், சிறந்த ஊடகப் பதிவுகளை ஆவணப்படுத்துவதற்காகவும் தான்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book WhatsApp வாசிப்புகள்.