You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
வாழ்க்கையின் சோகங்களையும், சுகங்களையும் சம நோக்கோடு எடுத்துக் கொண்டு நகைச்சுவையாக எழுதுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவராக விளங்கியவர் சாவி என்றழைக்கப்படும் சா.விஸ்வநாதன். வட ஆற்காடு மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆனந்த விகடன், தினமணி கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். சாவிக்காகவே கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இதழ் குங்குமம். பின்னர், சொந்தமாக தமது பெயரிலேயே 'சாவி' என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜ், பெரியார், எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, ஜி.டி.நாயுடு, எஸ்.எஸ். வாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் 1942-ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர். பின்னர் மகாத்மா காந்தி தலைமையில் நவகாளியில் நடைபெற்ற யாத்திரையிலும் கலந்து கொண்டவர். விசிறி வாழை, நவகாளி யாத்திரை போன்ற பல நூல்களை சாவி எழுதியிருந்தாலும் அவரை பரவலாக அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் அடையாளம் காட்டிய நூல் ‘வாஷிங்டனில் திருமணம்’ தான். ஆசிரியர் சாவி எழுதிய, "சிவகாமியின் செல்வன்' காமராஜ் என்கிற மாமனிதரின் பல்வேறு பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், சுதந்திர இந்தியாவின் மிகவும் முக்கியமான காலகட்டங்களான 1947 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களின் பின்னணிகளைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் விளங்குகிறது. ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவே பெரும்பாலும் அறியப்பட்டாலும், எழுத்தாளராக சாவியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. நகைச்சுவை அவரது பிரத்தியேக பலம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book ஆப்பிள் பசி.