You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
சாவி தன்னுடைய நகைச்சுவை ததும்பும் எழுத்துக்களால் தமிழ்ப் பத்திரிகை உலகத்தில் நீண்ட காலம் வலம் வந்தவர். நவகாளி யாத்திரை போன்ற நேரடி அனுபவம் சார்ந்த புத்தகங்கள் பலவற்றை இவர் எழுதியிருந்தாலும், கற்பனையும் அங்கதமும் கலந்த ‘வாஷிங்டனில் திருமணம்’ என்கிற நூலே சாவிக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. அதிலிருந்து ஒரு பகுதி…வாழை மரம் என்பது டாஞ்சூரில் நிறையப் பயிராகிறது. அதனால் அவற்றை வெட்டி வந்து பந்தல் முழுவதும் கட்டிவிடுகிறார்கள்.வாழை இலைகளைச் சாப்பிடுவதற்கு உபயோகிக்கிறார்கள். காய்களை வெட்டிச் சமைத்துவிடுகிறார்கள். வாழைப் பட்டைகளில் இருந்து நார் என்னும் ஒருவகை ‘த்ரெட்’ தயாரித்து அதில் பூத்தொடுக்கிறார்கள். வாழைக்கும் பூ உண்டு. ஆனால், அந்தப் பூவைத் தலையில் சூடிக் கொள்வதில்லை.
கல்யாணத்துக்கு முதல்நாள் ‘ஜான் வாசம்’ என்ற பெயரில் ஒரு ‘ப்ரொஸெஷன்’ நடக்கிறது. அப்போது ‘பிரைட்க்ரூம்’ ஸ¤ட் அணிந்து கொள்கிறார். இந்த ‘·பங்ஷ’னின் போது மாப்பிள்ளை ஆங்கில முறையில் டிரஸ் செய்து கொள்வதால் ஒருவேளை இதை ‘ஜான் வாசம்’ என்று ஆங்கிலப் பெயரிலேயே குறிப்பிடுகிறார்களோ, என்னவோ?
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book வாஷிங்டனில் திருமணம்.