You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
அறியாமை
===========
நம்முடைய பார்வையில் இன்று இந்த உலகம் எப்படி இருக்கின்றது?
யோசித்துப் பார்த்தீர்களேயானால், மிகவும் துக்கம் நிறைந்ததாக காணப்படுகின்றதா? அல்லது மகிழ்ச்சி நிறைந்ததாக காணப்படுகின்றதா?
கூறுங்கள் பார்க்கலாம்?
இந்த உலகம் மிகவும் துயரம் நிறைந்ததாகவும், அமைதி குறைந்ததாகவும் காணப்படுகின்றது என்று நீங்கள் கூறினீர்களேயானால், நிச்சயம் நீங்கள் அமைதியை இழந்து, துயரத்துடன்தான் இன்றுவரை காணப்படுகின்றீர்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
அதுவே, நீங்கள் இந்த உலகம் முழுவதும் அமைதியாகவும், ஆனந்தம் நிறைந்ததாகவும் இருக்கின்றது என்று கூறமுடியுமானால், நீங்கள் அமைதியின், ஆனந்தத்தின் இருப்பிடம் என்று அறிந்துக் கொள்ள முடிகின்றது.
ஆனால், இது எத்தனைப் பேருக்குத் தெரியும்!
ஆம், இது அவரவர்களின் மனதினால் உண்டாகின்ற உலகம்.
அவரவர்களின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல, இந்த உலகத்தைப் படைத்துக் கொள்கின்றோம். அதற்கேற்றவாறு காண்கின்றோம்.
இவ்வாறு படைக்கப்பட்ட உலகிலே மனிதனுக்கு உண்டான மரணபயம் இருக்கின்றது அல்லவா? அதுவே, அவனது அறியாமை என்பதை நன்கு அறிந்துக் கொண்ட சிலர், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, மற்றவர்களிடம் பணம் பறித்துக் கொண்டிருக்கின்றார்கள்?
அவர்கள் மனதில் படைத்துக் கொண்ட உலகம் அப்படி! அதனால் அவர்களைப் பொறுத்தவரையில் ஏமாளிகள் நிறைந்த உலகம் இது.
யோசித்துப் பாருங்கள்!
உண்மையிலேயே மரணம் யாருக்கு இல்லை?
மனிதனைத் தவிர மற்ற ஜீவர்கள் இறப்பதில்லையா?
ஐந்தறிவு படைத்த மிருகங்கள்கூட தங்கள் இறப்பைப் பற்றி கவலைக் கொள்வதில்லை.
ஏன்?
அவைகளுக்கு மற்றவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட, திணிக்கப்பட்ட அறிவு கிடையாது. அதனால், அவைகள் தன்...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அறியாமை.