You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
என் கடன் பணிசெய்து கிடப்பதே! - திரு. வி. கலியாணசுந்தரனார்
En Kadan Pani Seidhu Kidappathe by Thiru. V. Kalyanasundaram was first published in 1921.
ஞானத்துக்கும் பக்திக்கும் ஊற்றாயுள்ள கரும யோகத்தைத் தமிழ்நாட்டுச் சக்தியாக்கிரகியாகிய அப்பர் சுவாமிகள் “என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று ஒரு பாவின் ஓர் அடியில்
அமைத்து ஓதியிருக்கிறார். அப்பர் மனமொழி மெய்களால் இடையறாது பணி செய்து, பணியின் திறத்தை யுணர்ந்தவர்.
அவர் மனத்தால் ஆண்டவனை நினைந்து, வாயால் அவன் புகழைப் பாடி, கையால் உழவாரத் தொண்டைச் செய்து,நிஷ்காமிய கருமயோகியாய், ஞானத்தையும் பக்தியையும் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்த வரலாற்றைப் பெரிய புராணத்திற் பார்க்க.
அப்பெரியார் அருளிச் செய்த தமிழ் மறையில் ஞானமும் கருமும் பக்தியும் ததும்பி வழிதலைக் காணலாம். அவரது அநுபவம் அல்லது அடைவு, “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னுந் திருவாக்காகப் பரிணமித்தது என்று கூறலாம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book என் கடன் பணிசெய்து கிடப்பதே!.