You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
பண்டைய தென்இந்தியாவை ஆட்சி செய்த பேரரசுகளைக் கூறுக என்றால், பெரும்பாலானோரின் நினைவிற்கு வருவன சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவப் பேரரசுகள் ஆகிய நான்கு பேரரசுகளே ஆகும். இப்படி பெரும்பாலானோர் நினைப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் உண்மையில், பண்டைய தென்இந்தியாவை ஆட்சி செய்த பேரரசுகள் மொத்தம் ஐந்து ஆகும். ஆம் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் விட்டுப்போன அல்லது மறைக்கப்பட்ட ஒரு பேரரசான களப்பிரர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரரசுகள் ஆவர். இவர்கள், அதாவது களப்பிரர்கள் ஆட்சிசெய்த காலத்தை இருண்ட காலம் என சரித்தர வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பாண்டியர்களின் காலத்தை வைத்துக் கணக்கிட்டால் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலம் கி.பி. 250 க்கும் கி.பி. 600 க்கும் இடைப்பட்ட சுமார் 350 ஆண்டுகள் ஆகும். இப்படி நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பேரரசான இவர்களைப் பற்றி அதிகக் கல்வெட்டுகளோ, தடையங்களோ கிடைக்கவில்லை. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை "கி.மு. வில் அஜய் ஆர்யபாட்டா" எனும் இக் கற்பனைக் கதையின் மூலம் அடுத்தடுத்த பாகங்களில் காணலாம். களப்பிரர்கள் கி.பி. யைச் சேர்ந்தவர்கள்... ஆனால் கதைக்களம் கி.மு. வில் நடைபெறுகிறதே என்று வாசிப்பவர்கள் கேட்டால், சோழர்களில் முற்காலச் சோழர்கள், இடைக்காலச் சோழர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் என மூன்று வகை உள்ளதைப்போல், இக்கதையிலும் கி.மு. வில் முற்காலக் களப்பிறர்கள் வாழ்ந்தனர் என்ற கற்பனையின் அடிப்படையில் அவர்களை சரித்திரக் களப்பிறர்களோடு தொடர்புபடுத்திக் கூறுவதே இக்கதையின் சாராம்சம் ஆகும். இது சரித்திரப்பின்னணி கொண்டதுமட்டுமின்றி, காலப்பயணம் போன்ற அறிவியல் புனைகதையும் ஆகும். எனவே... படிக்க..! இரசிக்க..! நன்றி .
India's answer for fantasy novels like Game of thrones and Harry Potter
தமிழ் பேரரசுகளின் வரலாறு காணாத பாகங்கள்
தமிழ் பேரரசுகளின் வரலாறு காணாத பாகங்கள்
இக்கதையின் மூலம் அடுத்தடுத்த பாகங்கனை காண காத்திருக்கும் நண்பர்கள்