You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

பரோக்ஷ ராமாயணம்

ஐம்பது ஸ்லோகங்களில் ராமாயணம்
M Jayaraman
Type: Print Book
Genre: Religion & Spirituality, Education & Language
Language: Sanskrit, Tamil
Price: ₹180 + shipping
Price: ₹180 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

பரோக்ஷ ராமாயணம் எனும் இந்த சிறிய சம்ஸ்க்ருத காவியம் நான் வசிக்கும் வீட்டினால் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டது. . பிரம்மஸ்ரீ ஆர் ரங்கன் ஜி இல்லத்திற்கு குடிபெயர்ந்து செல்லும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. ஸ்ரீ ரங்கன் ஜி,
ராமாயணம், பாகவதம் மற்றும் பக்தி இலக்கியங்கள் பற்றிய தனது அறிவார்ந்த சொற்பொழிவுகளுக்காக ஆஸ்திகர்களிடையே உலகளவில் போற்றப்படுபவர். அவரது வீட்டின் கூடத்தில் ஒரு சுவர் முழுவதும் 50 வண்ணமயமான படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த 50 படங்களில் ராமாயணத்தின் முழு கதையும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் அந்தப் படங்களைப் பார்த்து 50 ஸ்லோகங்களை இயற்ற இது என்னைத் தூண்டியது. ஶ்ரீராமனின் அருளால் என்னால் அதை முடிக்க முடிந்தது.

இந்த முயற்சியில் புதுமையைச் சேர்க்க, ஒவ்வொரு ஸ்லோகமும் பரோக்ஷ லிட் லகாரத்தில் (தொன்மைசார் இறந்த காலம்) உள்ள ஒரு வினைச்சொல்லுடன் தொடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் லிட் லகாரத்தின் பயன்பாட்டை ஆராய்வதில் ஆர்வத்தைத் தூண்டலாம். இந்த வெளியீட்டில் அனைத்து 50 ஸ்லோகங்களும் தேவநாகரி வரிவடிவத்திலும், தமிழ் வரிவடிவத்திலும் தமிழ் மொழிபெயர்ப்புடன் கொடுக்கப்பட்டுள்ளன. முடிவில் ஸ்லோகங்களின் அகரவரிசையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் லிட் லகரத்தில் உள்ள வினைச்சொற்களின் அகரவரிசையும் அவற்றின் வேர், பின்னொட்டு மற்றும் வினைச்சொற்கள் பயன்படுத்தப்படும் ஸ்லோகத்தின் எண்ணிக்கையும் வழங்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்களும், சம்ஸ்க்ருத ஆர்வலர்களும் பரோக்ஷ ராமாயணம் எனும் இந்த நூலுக்கு நல்லாதரவு அளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

About the Author

ம. ஜயராமன், சென்னைப் பல்கலைக் கழத்தில் முனைவர் பட்டம் (2010) பெற்ற பின், கிருஷ்ணமாச்சார்ய யோக மந்திரத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் இயக்குனராக பணியாற்றினார் (2010-2021). தற்போது எஸ் வியாச யோக நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் (பெங்களூரு) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 25 புத்தகங்கள், தேசிய, சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் 20 ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ளார். கலாச்சார, ஆன்மிக பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். பதஞ்சலி சரிதம், யோக சூத்திரங்களின் வியாஸர் உரை (3 தொகுதிகள்), ஹட யோக பிரதீபிகை ஆகிய நூல்கள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமரர் கல்கியின் பத்து சிறுகதைகளை இவர் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூல் (கல்கி கதா மஞ்ஜரி) சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்பு பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது(2023). மந்திர-அர்த்தம் எனும் இவரது சம்ஸ்க்ருத நூலுக்காக கர்நாடக சம்ஸ்க்ருத பல்கலைக் கழகத்தின் நூல் விருது பெற்றுள்ளார் (2021). பாரத மொழிகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் தமிழக ஆளுனரின் விருது பெற்றுள்ளார் (2023).

Book Details

ISBN: 9789334039078
Number of Pages: 84
Dimensions: 5"x8"
Interior Pages: B&W
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

பரோக்ஷ ராமாயணம்

பரோக்ஷ ராமாயணம்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பரோக்ஷ ராமாயணம்.

Other Books in Religion & Spirituality, Education & Language

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.