You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
சினிமா சார்ந்த ஆராய்ச்சி புத்தகங்கள் ஒரு புறம் நான் எழுத, எனக்குள் தேங்கிக்கிடக்கும் சிறு கதைகளையும் ஒரு தொகுப்பாக எழுதிவிடவேண்டும் என்கிற ஆவல் இந்த புத்தகத்தின் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறேன். என்னுடைய குழந்தைப்பருவத்திலிருந்தே சிறிய கதைகள் சொல்லி அதில் இருக்கும் நீதியினை என்னுடைய பாடி விளக்குவார். இங்கே நான் எழுதியிருக்கும் கதைகளில் அப்படிப்பட்ட நீதியினை வெளிப்படையாக சொல்லாமல் படிப்பவர்கள் புரிந்துகொள்கிற வகையில் மறைமுகமாக சொல்லியிருக்கிறேன்.
சில கதைகள் உங்களை சிரிக்க வைக்கலாம், சில கதைகள் உங்களை சிந்திக்க வைக்கலாம். ஏதுவாக இருந்தாலும் உங்களுக்கு அது பயனுள்ளவையாகவே இருக்கும் என்பது என்னுடைய திண்ணமான கருத்து. எந்த கதையையும் ஒரு தொடக்கம், முடிவு என்கிற இலக்கண வரைமுறையில் இருக்காது. கதை திடீரென தொடங்கியதாக தோன்றினாலும் உங்களை கவர்ந்திழுக்கும். திடீரென முடிந்தாலும் உங்களுக்கு ஆச்சர்ய தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book துக்கடா கதைகள் (Thukkada Kathaigal).