You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
கீழ்கண்டவற்றை நாம் விவரமாக பார்க்கலாம்
• ஸ்கிரிப்ட் ஆடிட் என்றால் என்ன?
• இதை பயன்படுத்துதல் அவசியமா?
• இதன் முக்கியத்துவம் என்ன?
• திறமையான இயக்குனர் திரை எழுத்தாளர்களும் இந்த வட்டத்திற்குள் வரவேண்டுமா?
• ஸ்கிரிப்ட் ஆடிட் என்பது இயக்குநருநாரையும், அவரின் படைப்பையும் அவமதிக்கும் செயலா?
• ஸ்கிரிப்ட் ஆடிட் செய்வதால் கதை இயக்குனரின் பார்வையில் அல்லாமல் ஆடிட் செய்பவரின் பார்வைக்கு சென்றுவிடுமா?
• ஸ்கிரிப்ட் ஆடிட்டர்கள் கதையை மாற்றும் சக்தி கொண்டவர்களா?
• பல கதைகளை ஆடிட் செய்வதால் மற்ற இயக்குனரிடத்தில் நம் கதைகள் கசிய வாய்ப்பிருக்கிறதா?
• ஸ்கிரிப்ட் ஆடிட் செய்ய என்ன படிப்பும், தகுதியும் இருக்கிறது?
• ஆடிட்டருக்கு முன் அனுபவம் தேவையா?
• கதை விவாதம் செய்ய பல இணை, துணை இயக்குனர்கள் இருக்கும்போது இந்த ஸ்கிரிப்ட் ஆடிட் எல்லாம் தேவையா?
• கதை எழுத ஆரம்பிக்கும் பொழுதே ஸ்கிரிப்ட் ஆடிட் செய்ய வேண்டுமா?
• எதையெல்லாம் ஸ்கிரிப்ட்ல் ஆடிட் செய்யவேண்டும்?
• ஸ்கிரிப்ட் ஆடிட்டர் எப்படி ஆடிட் செய்வார்?
• குறைகளை கண்டுபிடிப்பது தான் ஸ்கிரிப்ட் ஆடிட்டா?
• ஸ்கிரிப்ட் ஆடிட்டர் கூறும் தகவல்கள் எல்லா வகையான பார்வையாளனுக்கு பொருந்துமா?
• ஸ்கிரிப்ட் டாக்டர் என்றால் என்ன?
போன்ற நிறைய கேள்விகளுக்கு விடையாக இந்த புத்தகம் அமைகிறது.
இந்த புத்தகத்தில் சில திரைப்படங்களைப்பற்றி, படைப்பாளிகளைப்பற்றி நேரடியாக எந்தவித விமர்சனமோ, சாடலோ செய்யவில்லை. எந்த திரைப்படமும் இப்படி எடுத்தது தவறு, தணிக்கை செய்திருந்தால் நல்ல திரைப்படமாக வந்திருக்கும் என்கிற உதாரணமும் இதில் இல்லை. தணிக்கை விதிப்படி எந்த நபரின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் பொதுத்தளத்தில் உபயோகப்படுத்தி அவரின் பெயருக்கோ, புகழுக்கோ களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதினை கருத்தில் கொண்டு பெயர் இல்லாமல் உதாரணங்கள் இருக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book Thiraikkathai Thanikkai.