You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
தீர்ப்பளியுங்கள் "கம்பனையா கடிந்துரைக்கிறீர்கள்? அவனன்றோ அருந்தமிழன் பெருமையை நிலைநாட்டினான் அருங்கலை உணரா மக்களே அவன் அருமை அறியாது கண்டது பேசிக் குழப்ப மூட்டாதீர்!" ''கம்பனின் கலைத்திறமை - கவிதை அழகு இவை பற்றி அல்ல நாம் குறை கூறுவது; கவி எடுத்தாண்ட கதை; அக்கதையின் விளைவு; அதனால் நமது இன கலாச்சாரத்துக்கு வந்துற்ற கேடு இவைபற்றியே நாம் கண்டிக்கிறோம்." “ஓஹோ! கவிதை அழகும் உனக்குத் தெரியுமோ! கசடர் அறிவரோ கலையின் மேன்மையை, '' ''அறிவோம் ஐயனே! அகமகிழ்வு கொள்ளும் அளவு மட்டுமல்ல. செப்பனிடும் அளவுக்கும் அறிவோம்." “செருக்குடன் பேசுகிறாய்; செந்தமிழை ஏசுகிறாய்; கம்பநாட்டாழ்வாரின் கவிதையைச் செப்பனிடுவையோ? என்னே உன் சிறுமதி!'' ''புலவரின் பாடலை மற்றோர் புலவன் செப்பனிடும் முறையிலே அல்ல. புலவரின் பாடலை ஒரு சாமான்யனின் கண்கொண்டு பார்த்து பகுத்தறிவாளனின் நோக்குடன் ஆராய்ந்து பார்த்திருக்கிறோம்.''
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கம்பரசம்.