You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

கணக்கு மந்திரங்கள்

உத்திகள் மூலம் கணிதம்
கு.சீனுவாசன்
Type: Print Book
Genre: Children, Mathematics
Language: Tamil
Price: ₹146 + shipping
This book ships within India only.
Price: ₹146 + shipping
Dispatched in 5-7 business days.
Shipping Time Extra

Description

அங்கன்வாடி முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலவழி மற்றும் தமிழ் வழி என்று இல்லாமல் பொதுவாக கணக்கில் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை கணித செயல்பாடுகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.
PRE KG குழந்தையோ அல்லது +2 குழந்தையோ கணித அடிப்படைச் செயலை அறிந்து கொள்ள நீங்களும் இந்த மந்திரங்களை முயற்சிக்கலாம்தானே?

About the Author

இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?
எனது பள்ளியில் படித்த பல மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு! – மோ.கணேசன் 27 ஜூன் 2016 புதிய தலைமுறை கல்வி நாளிதழ்.
சீனுவாசனின் “322 ஆலகோ” மந்திரம்
கணக்கு பாடத்தைப் பாட்டாகப் பாடிப் புரிய வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆசிரியர் கே.சீனுவாசன்.
அரசுப் பள்ளியின் பிள்ளைகள் மீது ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் இங்கேயும் ஆற்றல் மிக்க மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்காக நான் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெடுகிறேன். அதற்கான பலனையும் கண்கூடாகப் பார்க்கிறேன். அவ்வளவுதான். -குள.சண்முகசுந்தரம் ஆகஸ்ட் 16, 2016 தி இந்து வெற்றிக்கொடி நாளிதழ்.
ஈசியாக ஜெயிக்கலாம் கணக்கில்! விழுப்புரம் ஆசிரியரின் மேத்ஸ் மந்திரம்
அனைத்து பாடங்களிலும் மார்க்குகளை அள்ளும் சூப்பர் மாணவர்களுக்கும் ஸ்பீட் பிரேக்கராக அமைவது கணக்குதான்.பின்னே “கணக்கு பிணக்கு ஆமணக்கு” என பாரதி சும்மாவா சொல்லியிருப்பார்! ஆனால் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாறையாய் மூளையில் கனத்த கணக்கைத் தன் சூப்பர் டெக்னிக்குகளின் மூலம் இலவம் பஞ்சாக மாற்றி மாணவர்களைப் படிக்கத் தூண்டுவது ஆச்சரியம்தானே! -புகழ்.திலீபன் 29.06.2017 கல்வி வேலைவாய்ப்பு மலர் தினகரன் நாளிதழ்.
• ஓர் ஆசிரியருக்கு ஆலமரத்தின் நிழலே போதும். அதை அவர் வகுப்பறையாக மாற்றி விடுவார்.
• பல மாணவர்களின் தலைவிதியை மீண்டும் மாற்றி எழுதப் பயன்படும் மிக அற்புதமான கருவி ஆசிரியரின் கையில் இருக்கும் ஒரு துண்டு சுண்ணக்கட்டி.
• ஒவ்வொரு குழந்தையும் ஒரு மொட்டு. அது மலரும் உரிமைக்குத் தகுதியானது. ஆனால் அதுவரை ஆசிரியர் காத்திருக்க வேண்டும்.
• என்னுடைய புத்தகங்கள் மூலம் அடிப்படைத் திறன்களை கற்றுக் கொள்வதற்கு வழக்கமாக ஆகும் நேரத்தை விட குறைவான நேரத்தில் நீங்கள் அவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.
-கு.சீனுவாசன், விழுப்புரம்
கு.சீனுவாசன் குழந்தைகளால் விரும்பப்படுகிற ஓர் ஆசிரியர் ஆவார். இவருடைய எழுத்தில் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் இ-புத்தகங்களாகக் கிடைக்கின்றன. குழந்தைகள் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணக்கு ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை விரைவாகக் கற்றுக் கொள்ளவும், அவர்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றி உயரவும் வழி காட்டக் கூடிய நூல்களைப் படைப்பதையே தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்பட்டு வருகிறார். JOLLY CLASSROOM என்ற யூட்யூப் இணையதளத்தில் எளிய கற்றல் உத்திகளை அறிந்திடுங்கள்.

Book Details

Number of Pages: 48
Dimensions: 8.27"x11.69"
Interior Pages: B&W
Binding: Paperback (Saddle Stitched)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

கணக்கு மந்திரங்கள்

கணக்கு மந்திரங்கள்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கணக்கு மந்திரங்கள்.

Other Books in Children, Mathematics

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.