You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
வாசகர் பார்வையில்:
திருமண பந்தத்திற்கு வெளியே ஓர் ஈர்ப்பு வருதல் இயல்பே. ஆனால் ,திருமண பந்தத்தின் ஒழுங்கிசையே, 'லயம்' தப்பும் ஒரு மோகித தருணமும் வரக்கூடும். விழுமியங்களை பலி கேட்கும் உணர்வுபீடமும் அதுவே . சரி/தவறு என்பதை தாண்டி, அதன் முன்நொடி வரை கட்டெழுப்பி இருந்த நம் மதிப்பாளுமையை விழுங்கிடும் ஒற்றை அழிப்பேரலை அது.
'நீதிகள்' ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம்தான். ஆனால், பாதிப்புகள் சமமல்ல;இடியின் பாதிப்பு , நீரில் வேறு, நிலத்தில் வேறு !
இது கிளர்ச்சியின் கதை அல்ல. தப்பித்தலின் கதை அல்ல. விடைதேடும் பயணம்.சஞ்சலத்தின் ஆதிநுனியும் , உறவுகளின் நுண்ணிய பிளவுகளும் சேரும் தொடுவானம் எது ? வெளியில் ஒழுங்காகத் தோன்றும் ஒரு வாழ்க்கையின் உள்ளே,கடமை, காதல், நம்பிக்கை, ஆசை —இதற்கிடையில் ஒரு பெண் எதைத் தேர்ந்தெடுக்கிறாள்?
இப்படியான ஓரு சூழலை நேர்கொள்ளாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
சந்திக்க நேர்ந்தால் ??
'மௌனத்தின் மறுபக்கம் '.
சில கதைகள் சத்தமாக முடிவதில்லை.அவை வாசகர் மனதில்நீண்ட நேரம் மௌனமாகத் தங்கிவிடும்.
- இனியவன்
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மௌனத்தின் மறுபக்கம்.