You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ஒரு நாள் கவர்ச்சி விழா..
நம்பர் எட்டைப் போலவே பெண்ணைச் சுற்றி பின்னலிடும் வளையங்கள்.
என் கதை நாயகி பாரதியையும் விட்டு வைக்கவில்லை.
உடலைத் தொட்டவனெல்லாம் உரிமையாளனில்லை..
உணர்வுகளைத் தொட்டவன் தான் உரிமையாளன்.
நாணல் போன்ற பெண்ணவள்.
வளைந்து கொடுத்தாள்.உடையாமல் தன்னை தானே மெருகேற்றிக் கொண்டாள்.
வாழ்க்கையே தேடல் தான்.
பாரதி..தன் வாழ்க்கையை எவ்வாறு தேடினாள்?
ஜன்னலில் வண்ணத்துப்பூச்சியாய் அவள்.
அன்புடன் ரபியா.
கதாசிரியர் செதுக்கிய சிற்பம்
அழகான சிற்பம் போல கதையைச் செதுக்கியுள்ளார் கதாசிரியர். முப்பரிமாணமுள்ள அழியாத கற்சிலை. அணிகலன்களாக உறவுகள். இரு கரங்களின் விலங்கான தங்கை, கணவன் என்ற கதாபாத்திரங்கள் உலா வருவது அழகு. பெற்றோர், உடன் பிறப்புகள், உற்றவர்கள் என்று உடலில் பூட்டிய அணிகலன்களை நட்பு என்ற கத்தரியால் வெட்டி எறிந்து விட்டு சிறையின் ஜன்னல் வழியே உலகம் வியக்க பறக்கிறது வண்ணத்துப் பூச்சியாக..கண்டிப்பாக வாசியுங்கள்.