You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
ஒரு மாபெரும் காவியப் போரின் துவக்கத்திலே இரு நண்பர்க-ளுக்கிடையே கலந்துரையாடல் நிகழ்கின்றது. அவர்களில் ஒருவனான அர்ஜுனன் தாம் எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவை எண்ணி பெருந்துயரமும், குழப்பமும் அடைகிறான்; அவர்களுள் மற்றொருவரான கண்ணனோ அர்ஜுனனது குழப்பங்களை தீர்க்க எண்ணி அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை எடுத்துரைக்கிறார். இப்போர்த்தள உரையாடலில் கண்ணன் ஒரு கைதேர்ந்த ஆசானாக விளங்கி அர்ஜூனனுக்கு ஊக்கமளித்து, ‘பகவத் கீதை’ எனும் அமர காவியத்தை அவனுக்குப் பயில்விக்கிறார். இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தையும், மத மரபுகளையும், மேலும் அதன் தத்துவ மற்றும் ஆன்மீக கலாச்சாரங்களையும் அறிய விரும்புவோருக்கு, பகவத் கீதை நூல் ஒரு சிறப்பான துவக்கமாக விளங்கும்.
தற்காலத் தமிழில் பகவத் கீதையின் எளிய மொழிபெயர்ப்பாக விளங்கும் இந்நூல் திரு. கோடி ஸ்ரீகிருஷ்ணா மற்றும் திரு. ஹரி இரவிகுமார் அவர்களது ஆங்கில நூலான ‘த நியூ பகவத்கீதா’ எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது. விரிவான முன்னுரை, பற்பல விளக்கக் குறிப்புகள், நிறைவான சொற்களஞ்சியம் கொண்டுவிளங்குவதோடு மட்டுமல்லாமல், இந்நூலில் பகவத்கீதை வரிகள் அனைத்தும் கிரந்தத் தமிழில் வழங்கப்பட்டுள்ளது.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பகவத்கீதை தற்காலத் தமிழில்.