You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

பாமரக் குறளுரை (eBook)

Type: e-book
Genre: Reference
Language: Tamil
Price: ₹100
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

திருக்குறள் - ஆழ்ந்த அறிவு, சொல் நயம், இலக்கிய உவமை, இலக்கணச் செழுமை போன்ற பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இரண்டு அடிகளால் ஆன எளிய வடிவத்தை திருக்குறள் கொண்டிருந்தாலும், அதன் தொன்மையின் காரணமாக, இன்றைய எளிய தமிழ் அறிவு கொண்ட தலைமுறையினர் அதனை முழுமையாக படித்து உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பது என் எண்ணம். அதனை முன்னிட்டே, "பாமரக் குறளுரை" எனும் இந்நூல், பல்வேறு உரைநடை நூல்களை படித்துணர்ந்து, உட்கருத்தை உள்வாங்கி, எளிய தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த தமிழறிவு கொண்டிருந்தாலும், “திருக்குறளில் நம் வாழ்விற்கு தேவையானது என்ன இருக்கிறது?” என்பதை அறிய ஆர்வம் கொண்டோருக்கு இந்நூல் பெரிதும் பயனுள்ளதாக  அமையும் என்பது என் நம்பிக்கை.

About the Author

நான் நடுத்தர வயதை கடந்த ஒரு சாமான்ய குடும்பத்தலைவன். தமிழ் முக்கலைகளை படித்து, கேட்டு, பார்த்து அதில் மெய்மறப்பதில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது சிறுசிறு முயற்சிகளையும் செய்து பார்த்து என்னுள் மகிழ்வதும் உண்டு.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக, “உலக பொதுமறை” என்று போற்றப்படுகின்ற திருக்குறளில் என்ன இருக்கிறது என்று அறிகிற ஆர்வம் என்னுள் எழுந்தது. ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்த திருக்குறளை ஒரு வரியில் எளிமைப்படுத்தி பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் மனதில் தோன்றியது.

திருக்குறளை அப்படியே படித்து உரை எழுதும் தமிழ் புலமை எனக்கில்லை. எனவே, திருக்குறள் உரைகளை தினமும் ஒவ்வொரு குறளாக படித்து, புரிந்து, அதனை என்னுள் வாங்கி, ஒரு வரியில் உரையாக எழுதும் முயற்சியைத் தொடங்கினேன். பத்து குறள் கொண்ட அதிகாரத்திற்கும், கடைசியாக ஒரு பத்தியில் அதிகாரச் சுருக்கமும் எழுத முற்பட்டேன். விடா முயற்சியுடன், தினமும் நாள் தவறாது, நேர கட்டுப்பாட்டுடன் உழைத்ததில், அந்த முயற்சி இந்த நூல் வடிவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Book Details

ISBN: 9789356923041
Number of Pages: 162
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

பாமரக் குறளுரை

பாமரக் குறளுரை

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book பாமரக் குறளுரை.

Other Books in Reference

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.