சத்தியமங்கலத்தில் முதல் நிலைப் பள்ளியிலும் கோயமுத்தூரில் மேல் நிலைப் பள்ளியிலும் படித்த கோ, 2002- இல் கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
2007-இல் தேர்ச்சி பெற்ற பின்னர் இங்கிலாந்தின் மனநல மருத்துவக் கல்லூரியின் உறுப்பினராக அனுமதி பெற்றார். 2010-இல் King's College London-இல் நரம்பு அறிவியல் முறையில் முது கலைப் பட்டமும், அதே ஆண்டு British Association for Psychopharmacology -யின் பட்டமும் அவர்களால் European College of Psychopharmacology-க்கு நியமனமும் செய்து கௌரவிக்கப் பட்டார்.
2009, 2010, 2012-ஆம் ஆண்டுகளின் நான்கு சிறந்த முதிர் நிலை பயிற்சி
மன நல மருத்துவர்களுள் ஒருவராக தேசிய அளவில் பாராட்டப் பட்டார். 2012-இல் மருத்துவக் கல்வி முறையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
2013-இல் Fellow of Higher Education Academy, 2014-இல் Fellow of Royal Society
of Medicine எனும் சிறப்பு வழங்கப் பட்டார்.
நூல்கள், மருத்துவ இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ள
இவர் முதியோர் மன நல மருத்துவராகவும், மன நல ஆசிரியராகவும்
இங்கிலாந்தில் பணி புரிந்து வருகிறார்.